ரணிலுக்கு மொட்டுவின் ஆதரவு குறித்து மகிந்த விளக்கம்
ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு(Ranil Wickremesinghe) ஆதரவு வழங்குவது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பு தெரிவித்துள்ளது.
மொட்டுக் கட்சியின் விசேட கூட்டம் நேற்று (07.05.2024) நடைபெற்றது.
இதன்போது கட்சியின் தலைவர் மகிந்த ராசபக்ச(Mahinda Rajapaksa) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பசில் ராஜபக்ச
மேலும், வெற்றி வேட்பாளர் ஒருவரையே தமது கட்சி களமிறக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து அமைப்பாளர்களும் கொழும்புக்கு நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தனர்.
கட்சியின் ஸ்தாபகரும், முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவும் இது தொடர்பான அழைப்பை விடுத்துள்ளார்.
அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடல் எதிர்வரும் அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கம் என தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 23ம் நாள் காலை இரதோற்சவம்





Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கையே கண்ணீர் மூழ்கடித்த அம்மா, மகன்! விஜய் ஆண்டனி கொடுத்த அங்கீகாரம் Manithan

பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
