குழந்தைகளுக்கான ஆண்டிபயாடிக் மருந்து: பெற்றோருக்கு வைத்தியர் விடுத்துள்ள எச்சரிக்கை
மருத்துவரின் பரிந்துரையின்றி நுண்ணுயிர் எதிர்ப்பிகளைப் பயன்படுத்துவதால், உடலின் உயிர்வாழ்வுக்குத் தேவையான பக்டீரியாக்களின் மரணம் ஏற்படலாம், இதன் காரணமாக சுமார் 50 ஆண்டுகளுக்குள் மனிதன் மரணத்தை தழுவ நேரிடும் என லேடி ரிட்ஜ்வே மருத்துவமனை குழந்தை நல மருத்துவர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
நவம்பர் 18 முதல் 24 வரை நடைபெறும் 'உலக ஆண்டிபயாடிக் விழிப்புணர்வு வாரம்' குறித்து கருத்து தெரிவித்த அவர், உலக நுண்ணுயிர் எதிர்ப்பு நிபுணர்கள் இதை ஆராய்ச்சி மூலம் கண்டுபிடித்துள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் பக்டீரியாவை வலுவிழக்கச் செய்து கொல்லும் என்றும், அதிகப்படியான நன்மை பயக்கும் பக்டீரியாக்களும் இதனால் கொல்லப்படுகின்றன என்றும் பெரேரா சுட்டிக்காட்டியுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பி
எனவே மிகவும் அவசியமான சூழ்நிலைகளைத் தவிர, தேவையில்லாமல் குழந்தைகளுக்கு ஆண்டிபயாடிக் மருந்துகளை வழங்க வேண்டாம் என்று அவர் பெற்றோரிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நுண்ணுயிர் எதிர்ப்பள், பக்டீரியா தொற்று ஏற்பட்டால் மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒருவரின் வயது மற்றும் எடை உட்பட பல காரணிகளை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் இதை பரிந்துரைக்கின்றனர்.
வைரஸ் காய்ச்சல் மற்றும் வயிற்றுப்போக்குக்கு நுண்ணுயிர் எதிர்ப்பிகள் தேவையில்லை.
இருமல், சளி மற்றும் சிறு காயங்களுக்கு, நுண்ணுயிர் எதிர்ப்பிகளை மருத்துவரின் பரிந்துரைப்படி மட்டுமே எடுக்க வேண்டும்," என்றும் மருத்துவர் பெரேரா தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

விரைவில் ஒளிபரப்பாக போகும் நடிகை குஷ்பு நடிக்கும் புதிய சீரியல்... எந்த டிவி, நேரம் முழு விவரம் Cineulagam

கொடூர வில்லனாக மாறிய குணசேகரன், தனது அம்மாவையே இப்படி செய்வாரா?... எதிர்நீச்சல் பரபரப்பு புரொமோ Cineulagam

மனைவியும் மாமியாரும் தினமும் துஷ்பிரயோகம் செய்வதாக அதிர்ச்சி புகார்! ரகசிய கமெரா மூலம் அம்பலமான கொடுமை News Lankasri

மனோஜ் கிட்ட கொஞ்சம் மனசு விட்டு பேசிருக்கலாமோனு உறுத்துது: சித்தப்பா Jayaraj Emotional Interview Cineulagam

சூப்பர் சிங்கரில் ஏ.ஆர்.ரகுமான் ஹிட்ஸ் ரவுண்டில் சில போட்டியாளர்களுக்கு சர்ப்ரைஸ்.. என்ன தெரியுமா? Cineulagam
