உலகக்கோப்பையில் ரசிகர்களின் மனங்களை வென்ற வீரர் எம்பாப்பேவிற்கு குவியும் வாழ்த்து
நடந்து முடிந்த உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த கெலியான் எம்பாப்பே தனது 24 வது வயதுக்குள் இரண்டு உலகக் கோப்பை இறுதி போட்டியில் விளையாடி அதில் அசத்தியிருக்கிறார்.
பிரான்ஸ் வீரர் எம்பாப்பே இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், பலர் அவருக்கு தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
தங்க காலணி விருது
உலகக்கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடித்து, தங்க காலணி விருதை கைலியன் எம்பாப்பே பெற்றுகொண்டார்.
உலகக்கோப்பையை நழுவ விட்டாலும், மூன்று கோல்கள் அடித்து எதிரணி ரசிகர்கள் உட்பட அனைவரது மனதையும் எம்பாப்பே கவர்ந்தார்.
பிரான்ஸ் அணிக்காக 36 கோல்கள் அடித்துள்ள எம்பாப்பே, பாரிஸ் செயின்ட் ஜேர்மன் அணிக்காக 118 கோல்கள் அடித்துள்ளார்.
பலர் வாழ்த்து
2018ஆம் ஆண்டு பிரான்ஸ் அணி உலகக்கோப்பையை வென்றபோது, எம்பாப்பே ஒரு கோல் அடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது 24 வது பிறந்த நாளை கொண்டாடும் எம்பாப்பேவிற்கு மெஸ்ஸி ரொனால்டோ என அனைத்து தரப்பு கால்பந்து ரசிகர்களுமே வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கால்பந்தில் பெரிய ஜாம்பவானாக விளங்க எம்பாபேக்கு வாய்ப்பு இருப்பதாகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.





பிரித்தானியாவில் மகன் பிறந்து.,இரண்டு மாதங்களில் மாயமான 28 வயது தந்தை: காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
