எனது அடுத்த அத்தியாயம் சுவாரஸ்யமாக அமையும்: முன்னனி கால்பந்து வீரர் வெளிப்படை
எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும் என பிரான்ஸ் நாட்டின் (France) கால்பந்து நட்சத்திரமான கிலியன் எம்பாப்பே (Kylian Mbappé) தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் இடம்பெற்ற லீக் 1 விருதுகள் வழங்கும் விழாவில் 2024இற்கான சிறந்த வீரர் என்னும் விருதை பெற்ற போது கருத்துரைக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது அவர் மேலும் கூறுகையில்,
"எனது அடுத்த கழகம் பற்றி அறிவிக்க இது சரியான நேரம் அல்ல. எல்லாவற்றிற்கும் ஒரு சரியான நேரம் இருக்கிறது.
லீக் - 1 சீசன்
எனது அடுத்த அத்தியாயம் மிகவும் சுவாரஸ்யமானதாக இருக்கும். புதிய விடயங்களைக் கற்றுக்கொள்ள ஆவலுடன் இருக்கிறேன்.
மேலும், லீக் - 1 சீசனிலிருந்து வெளியேறும் போது நான் சரித்திரம் படைத்திருக்க வேண்டும் என்று எனது அப்பா விரும்பினார்.
அதற்கமைய, இந்த நீண்டநாள் பயணத்தில் அதை நான் நிறைவேற்றி இருக்கிறேன் என்று மகிழ்ச்சி அடைகிறேன்" என தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சர்வதேச கால்பந்து அரங்கில் கிலியான் எம்பாப்வேவின் ரியல் மாட்ரிட் அணி ஒப்பந்தமானது எதிர்பார்ப்பு மிக்க ஒன்றாக மாறியுள்ளது.
25 வயதான பிரான்ஸ் நாட்டின் நட்சத்திர கால்பந்து வீரரான கிலியான் எம்பாப்வே PSG (பாரிஸ் செயிண்ட் - ஜெர்மைன்) அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.
புதிய ஒப்பந்தம்
மேலும் அவர், பி.எஸ்.ஜி (PSG) அணிக்காக இதுவரை 305 போட்டிகளில் விளையாடி 255 கோல்களை பெற்றார்.
அதேவேளை, 2022 கால்பந்து உலகக் கோப்பையில் ஆர்ஜென்டினாவிற்கு (Argentina) எதிராக அபாரமாக விளையாடி 3 கோல்களைப் பதிவு செய்திருந்தார்.
இந்நிலையில், நடந்து முடிந்த லீக் - 1 தொடரோடு PSG அணியிலிருந்து வெளியேற உள்ளதாக எம்பாப்பே அதிகாரபூர்வமாகத் தெரிவித்திருந்தார்.
இதன் காரணமாக புதிய கழகத்துடனான ஒப்பந்தம் விரைவில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
![நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா](https://cdn.ibcstack.com/article/717cbe9f-1106-4bfd-b453-a92fbb48fbca/24-6678df73b0fb0-sm.webp)
நயன்தாராவை தொடர்ந்து 37 வயது தென்னிந்திய நடிகையுடன் இணையும் ஷாருக்கான்.. இயக்குனர் யார் தெரியுமா Cineulagam
![மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கே சென்று பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டம்; ஹரிக்கு கடைசி வாய்ப்பு](https://cdn.ibcstack.com/article/aa407b00-39c6-49de-8ee0-ff6131cae9ce/24-66794714df4a5-sm.webp)
மன்னர் சார்லஸ் அமெரிக்காவுக்கே சென்று பேரப்பிள்ளைகளை சந்திக்க திட்டம்; ஹரிக்கு கடைசி வாய்ப்பு News Lankasri
![Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்?](https://cdn.ibcstack.com/article/a8770e11-d905-4183-992c-aa34d8b771d8/24-66786065d83f4-sm.webp)
Super Singer Winner: பிரம்மாண்டமாக நடைபெற்ற சூப்பர் சிங்கர் 10 கிராண்ட் ஃபினாலே! வெற்றி பெற்றது யார்? Manithan
![தள்ளுவண்டி கடையில் வடா பாவ் விற்கும் பெண்.., பிரம்மிக்க வைக்கும் ஒரு நாள் சம்பாத்தியம்](https://cdn.ibcstack.com/article/41282d83-30a8-48b9-8352-7d2aaf78f301/24-66793cfbb0d13-sm.webp)