ஈராக்கில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறக்க அழைப்பு
இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையில், ஈராக்கின் (Iraq) பக்தாத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை மீண்டும் திறப்பதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் உள்ள ஈராக் தூதரகத்தின் பொறுப்பாளர் முஹம்மது ஒபைட் அல்-மசூதி (Mohammed Obaid Jabur Al-Masoudi) இந்த அழைப்பை விடுத்துள்ளார்.
இலங்கை வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோவுடன் ( Nalin Fernando) இடம்பெற்ற சந்திப்பின்போதே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
வர்த்தக வாய்ப்புகள்
ஈராக்கில் வர்த்தக உறவுகளை ஏற்படுத்த இலங்கை முதலீட்டாளர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அவர், விசா பிரச்சினைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை இந்த தூதரகம் மூலம் செயற்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கை முதலீட்டாளர்களை பாக்தாத் மற்றும் ஈராக்கின் குர்திஸ்தான் பிராந்தியத்தின் தலைநகரான எர்பில் ஆகிய இரண்டிலும் வர்த்தக வாய்ப்புகளை ஆராயுமாறு அவர் வலியுறுத்தினார்.
ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுடனான இலங்கையின் வர்த்தகத்தை மேம்படுத்தும் நேரடி கப்பல் போக்குவரத்து வசதிகள் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 5 நாட்கள் முன்

ஒரு வார முடிவில் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படம் செய்துள்ள வசூல்... மொத்தம் எவ்வளவு தெரியுமா? Cineulagam

வெளிநாட்டவர் வேலைவாய்ப்பிற்கு சிக்கல் - பிரித்தானியாவில் 2000 நிறுவனங்களின் விசா ஸ்பான்சர் உரிமங்கள் ரத்து News Lankasri

ரயிலில் இனிப்பு விற்கும் முதியவருக்கு ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்.., விவரம் தெரிந்தால் சொல்லுங்கள் என லாரன்ஸ் வேண்டுகோள் News Lankasri
