குருநாகல் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கலந்துரையாடல்
குருநாகலின் (Kurunegala) பல பிரதேசங்களில் வாழும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வு காணல் தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது, வடமேல் மாகாண ஆளுநர் நஸீர் அஹமட்டின் (Nazeer Ahmat) தலைமையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது, குருநாகலிலுள்ள தமிழ்மொழி மூலப் பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் நகர்ப் பகுதிகளில் வாழும் மக்களின் வரி மதிப்பீ்ட்டுப் பிரச்சினைகள் போன்ற விடயங்கள் குறித்து பொதுமக்கள் சார்பில் கலந்து கொண்ட பிரதிநிதிகளால் ஆளுநருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரித நடவடிக்கைகள்
இதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த ஆளுநர், "மேற்குறித்த பிரச்சினைகள் தொடர்பில் துரிதமான நடவடிக்கைகள் எடுப்பதன் ஊடாக நிரந்தரத் தீர்வுகள் பெறப்படும்.
அத்துடன், இப்பகுதி இளம் தலைமுறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகின்றது.
மேலும், அவ்வாறான பிரச்சினைகள் தொடர்பில் உரிய தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு முன்னுரிமையளிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன” என குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்தக் கலந்துரையாடலில், குருநாகல் மாநகர சபையைின் முன்னாள் உறுப்பினர் மற்றும் குருநாகல் பெரிய பள்ளிவாசலின் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |