குருந்தூர் மலை பகுதியில் இன்று இனவாத கலவரம் ஏற்படலாம்..! சி.ஐ.டிக்கு பறந்தது கடிதம்
குருந்தூர் மலையில் இன்று (14.07.2023) நடத்த திட்டமிடப்பட்டுள்ள பொங்கல் நிகழ்வை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், இல்லையேல் இனவாத கலவரம் ஏற்படலாம் என்றும், “போராட்டத்திற்கும் அப்பால்” என்ற அமைப்பின் தலைவரான பலாங்கொடை கஸ்ஸப தேரர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (சி.ஐ.டி) கடிதமொன்றை அனுப்பி தெரிவித்துள்ளார்.
இன்று காலை 9 மணிக்கு குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் இருந்த இடத்தில் பொங்கல் வழிபாடு நடத்தப்படவுள்ளதாகவும், இதில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறும் வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்ட சிலரால் அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதனை அடிப்படையாகக் கொண்டே குறித்த தேரரால் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இவ்வாறு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |