73 வயது வயோதிபர் ஒருவர் வாளால் வெட்டிக்கொலை!- காணிப் பிரச்சினையால் நேர்ந்த துயரம்
குருநாகல் - கல்கமுவை பகுதியில் காணித் தகராறு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டுத் தாக்குதலில் 73 வயதுடைய வயோதிபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
மேலதிக விசாரணை
கல்கமுவை பகுதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான 73 வயதுடைய குடும்பஸ்தரே இந்தத் துயரச் சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.
இரு தரப்பினரிடையே நீண்ட காலமாக நிலவி வந்த காணித் தகராறு முற்றிய நிலையிலேயே, உறவினர் ஒருவர் இந்த வாள்வெட்டுத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய 48 வயதுடைய உறவினரான சந்தேகநபரைப் பொலிஸார் உடனடியாகக் கைது செய்துள்ளனர்.
சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
உதடு, நெற்றி, காலில் கடுமையான காயம் - மொஜ்தபா கமேனி குறித்து ஈரான் அதிகாரப்பூர்வ ஒப்புதல் News Lankasri
உக்ரைனுக்கு பணம் கொடுத்துக்கொண்டே இருக்கமுடியாது... பிரான்சிலிருந்து ஒலிக்கும் ஒரு குரல் News Lankasri