குருக்கள்மடம் மனிதப் புதைகுழி.. வெட்டுக் காயங்களுடன் மீட்கப்பட்ட மண்டை ஓடுகள்
குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின் போது மனித என்புத் தொகுதிகள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான அறிக்கை எமக்கு கிடைக்கப்பெற்றதன் பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கைகளை நாங்கள் நீதிமன்றத்தில் ஊடாக மேற்கொள்ள முடியும் என சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம் தெரிவித்தார்.
குருக்கள்மடம் மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கையின் இரண்டாம் கட்டத்தின் இறுதிநாள் நடவடிக்கைகள் நேற்று (14.10.2026) நிறைவுபெற்றுள்ளன.
பகுப்பாய்வு நடவடிக்கை
இது குறித்து கருத்து தெரிவித்த சட்டத்தரணி முபாறக் முஅஸ்ஸம், "குருக்கள்மடம் சந்தேகத்திற்குமான மனிதப் புதைக்குழி தொடர்பான அகழ்வு நடவடிக்கைகள் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்றத்தினால் ஆக்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக கடந்த 06.10.2026 அன்று 14.10.2026 வரை கடந்த 9 நாட்களாக இடம்பெற்று வந்தன.

இதன்போது மனித எச்சங்கள் நியாயமாக நம்பக்கூடிய பல பொருட்கள் மண்டை ஓடு உள்ளடங்களாக என்புத் தொகுதிகள் உள்ளடங்களாக பல்வேறுபட்ட பொருட்கள் வெட்டுக் காயங்களோடு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அவை நீதிமன்றிலே சான்று பொருட்களாக பாரப்படுத்தப்பட்டு சட்ட வைத்திய அதிகாரிகளினால் மேலதிக பகுப்பாய்வுகளுக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.