இலங்கையை உலுக்கிய கொடூரம்! ஆறு வயது சிறுமியும் மரணம்
கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பகுதியில் கடந்த 23ஆம் திகதி இடம்பெற்ற படகு விபத்தில் பாதிக்கப்பட்டு திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 6 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுமி கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியைச் சேர்ந்த எஸ்.நிபா (06வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா - குறிஞ்சாக்கேணிப் பால நிர்மாண வேலைகள் நடப்பதால், தற்காலிகமாகச் சேவையில் ஈடுபட்ட மோட்டார் இழுவைப் படகு உடைந்து, கவிழ்ந்ததில் பலர் நீரில் மூழ்கினர்.
இவ்விபத்தில் ஆறு பேர் பலியானதுடன், பதின்நான்கு பேர் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.
இவ்வாறு சிகிச்சை பெற்று வந்தோரில் ஆறு வயதுடைய சிறுமியை இன்று உயிரிழந்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
திருகோணமலையில் இன்று காலை ஏற்பட்ட துயரம்! உயிரிழந்தோர் விபரம் வெளியானது
கிண்ணியாவில் ஏற்பட்ட படகு விபத்து! கிழக்கு மாகாண ஆளுநர் விடுத்துள்ள செய்தி
அமெரிக்க ஒப்பந்தத்தை மறுத்தால் ஜெலென்ஸ்கி கொல்லப்படலாம்... ரஷ்யாவில் இருந்து கசிந்த தகவல் News Lankasri
அன்புக்கரசி வலையில் சிக்கிய தர்ஷன், பார்கவி சொன்ன விஷயம்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam