இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினால் தொடுக்கப்பட்ட வழக்கிலிருந்து குமார வெல்கம விடுதலை
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவினால் தொடுக்கப்பட்ட வழக்கில் இருந்து குமார வெல்கம விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
நெருக்கமானவருக்கு பதவி
கடந்த மகிந்த அரசாங்கத்தின் இரண்டாம் தவணைக்காலத்தில் குமார வெல்கம போக்குவரத்து அமைச்சராக இருந்தார்.
அப்போது அவர் இலங்கைப் போக்குவரத்துச் சபையில் உப தலைவர் பதவியொன்றை உருவாக்கி, அதனை தனக்கு நெருக்கமான ஒருவருக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
அதன் மூலம் அரசாங்கத்துக்கு 33 மில்லியன் ரூபா இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்து, இலஞ்சம் மற்றும் மோசடி, ஊழல் தடுப்புப் பிரிவினர் குமார வெல்கமவுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்திருந்தனர்.
வழக்கு விசாரணை
குறித்த வழக்கு நேற்று கொழும்பு பிரதான மாஜிஸ்திரேட் நந்தன அமரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது வழக்கை சீராய்வு செய்து மீண்டும் தொடுப்பதாக உறுதியளித்து வழக்கை மீள பெற அனுமதிக்குமாறும், அதுவரை சந்தேகநபரை விடுதலை செய்யுமாறும் இலஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை ஏற்றுக் கொண்ட நீதிபதி குமார வெல்கமவை வழக்கிலிருந்து விடுதலை செய்துள்ளார்.