குளியாப்பிட்டி இளைஞர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் காதலி கைது
குளியாப்பிட்டி இளைஞர் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரின் அவருடைய காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வஸ்ஸாவுல்ல இலுக்ஹின்ன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதான யுவதியே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
படுகொலைக்கு உதவியமை, குற்றச் செயலை மறைத்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸாரினால் கைது
குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞர் கடந்த ஏப்ரல் மாதம் 22ம் திகதி காதலியை பார்க்கச் சென்றிருந்த வேளையில் காணாமல் போயிருந்தார்.
குறித்த இளைஞரின் சடலம் சிலாபம் மாதம்பை பகுதியில் வைத்து மீட்கப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் குறித்த யுவதியின் தாய் மற்றும் தந்தை ஆகியோர் ஏற்கனவே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

புலம் பெயர் தமிழர்களால் சிறீலங்காவை இலங்கையாக மாற்றிக்கொள்ள முடியுமா..! 47 நிமிடங்கள் முன்

மாட்டப்போகும் ஆனந்தி.. வில்லி கைக்கு போகும் ஸ்கேன் ரிப்போர்ட்! சிங்கப்பெண்ணே இன்றைய ப்ரோமோ Cineulagam

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri

சிறகடிக்க ஆசை சீரியல் எப்போது முடிவுக்கு வரும், கிளைமேக்ஸ்.. தொடர் வசனகர்த்தா கொடுத்த பேட்டி Cineulagam

18 வயதிலே CEO; ஆண்டுக்கு ரூ.256 கோடி வருமானம் - படிக்க சீட் வழங்க மறுக்கும் பல்கலைகழகங்கள் News Lankasri
