தென்னிலங்கையில் தந்தையின் மோசமான செயல்: ஆபத்தான நிலையில் மகன்
சூரியவெவ வெவேகம பிரதேசத்தில் தந்தையொருவர் துப்பாக்கியால் சுட்டதில் மகன் காயமடைந்து ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக சூரியவெவ பொலிஸார் தெரிவித்தனர்.
சூரியவெவ, வெவேகம பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய தம்மாலகே இசுரு மதுஷங்க என்பவர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.
கடந்த 11ஆம் திகதி 30 வயதுடைய மகனுக்கும் அவரது தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
துப்பாக்கிச் சூடு
மகன் வெவேகம தனது வீட்டிற்கு அருகில் உள்ள வயில் பகுதியில் குடிபோதையில் இருந்த நிலையில், அவ்விடத்திற்கு வந்த தந்தை, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார்.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான மகன், பிரதேசவாசிகளால் சூரியவெவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய தந்தை தற்போது பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாகவும் தங்காலை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் உத்தரவின் பேரில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.





கைவிடப்பட்ட அஜித்தின் கஜினி பட போட்டோ ஷுட் புகைப்படங்களை பார்த்துள்ளீர்களா?... செம ஸ்டைலிஷ் போட்டோஸ் Cineulagam

Ethirneechal: அன்பு வலையில் வீழ்ந்த தர்ஷன்... சிறையிலிருந்து வெளிவந்த ஞானம்! பரபரப்பான ப்ரொமோ Manithan
