குருந்தூர்மலையில் சிவாலயம்: யாழ். நாக விகாரையில் இரகசிய கலந்துரையாடல்
புதிய இணைப்பு
குருந்தூர்மலையில் சிவாலயமொன்றை நிறுவ தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெளத்த இந்து அமைப்புகள் சில கூட்டாக அறிவித்தன.
குருந்தூர்மலை விவகாரம் தொடர்பில் இன்று (17.08.2023) யாழ்ப்பாணம் ஆரியகுளம் நாக விகாரையில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள், குருமார்களும் இரகசிய கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே பெளத்த இந்து அமைப்புகள் இதனை அறிவித்தன.
கலந்துகொண்ட விகாராதிபதிகள் நாளைய தினம் (18.08.2023) குருந்தூர் மலையில் இந்துக்கள் பொங்கலில் ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறவில்லை ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்தனர்.
இதன்போது ஆரியகுளம் நாக விகாராதிபதி, குருந்தூர் மலை விகாராதிபதி, தையிட்டி விகாராதிபதி, நாவற்குழி விகாராதிபதி உள்ளிட்ட சைவ இந்து அமைப்புகள் பலரும் கலந்துகொண்டனர்.
முதலாம் இணைப்பு
யாழ்.ஆரியகுளம் நாக விகாரையில், முல்லைத்தீவு - குருந்தூர்மலை பொங்கல் விவகாரம் தொடர்பில் இரகசிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த கலந்துரையாடலில் தென்னிலங்கை பௌத்த பிக்குகளும், சிவசேனை உள்ளிட்ட சில சைவ அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும், குருமார்களுக்கும் கலந்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த கலந்துரையாடல் இன்று(17.08.2023) வியாழக்கிழமை காலை முதல் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பொங்கலுக்கு அழைப்பு
இந்த கலந்துரையாடலில் ஊடகங்கள் அனுமதிக்கப்படாமல், இரகசியமாக நடந்து வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நாளை(18.07.2023) குருந்தூர் மலையில் இந்துக்கள் பொங்கல் விழா நடத்த ஈடுபடவுள்ள நிலையில், அது தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், குருந்தூர்மலையில் நாளை வெள்ளிக்கிழமை இந்து அமைப்புக்களால் பொங்கலுக்கு அழைப்பு
விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
