குருந்தூர் மலையில் பொங்கல் விழா: மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பு
முல்லைத்தீவு - குருந்தூர் மலையில் எதிர்வரும் 18 ஆம் திகதி, ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் விழா ஒன்றை மேற்கொள்ள உள்ளதாக முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
எனவே அனைவரும் இந்த பொங்கல் விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயத்தில் எதிர்வரும் 18 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அன்று, ஆதிசிவன் ஐயனாருக்கு பொங்கல் மேற்கொள்வதற்கு ஆலய நிர்வாகம் தீர்மானித்திருக்கிறது.
வழிபாடுகளை மேற்கொள்ள தடை இல்லை
எனவே மக்கள் அனைவரும் குருந்தூர் மலைக்கு வருகை தந்து ஆதிசிவன் ஐயனாரின் அருளைப் பெறுவதோடு, பொங்கல் விழாவையும் சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த விடயமானது நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தொல்லியல் திணைக்களம் சைவ வழிபாடுகளை மேற்கொள்வதற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரிவித்திருந்தது.
அதற்கமைய இந்த பொங்கல் வழிபாடுகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. எனவே அனைவரும் இந்தப் பொங்கல் விழாவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |