சர்ச்சையை ஏற்படுத்திய குருந்தூர் மலை விவகாரம்! களத்திற்கு சென்ற நீதவான்(Video)
இரண்டாம் இணைப்பு
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையில் நீதிமன்றக் கட்டளையை மீறி பௌத்தவிகாரை அமைக்கும் பணிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலயதினரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை இன்று (04.07.2023) இரண்டாவது தடவையாக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.
இதன்போது முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா குருந்தூர் மலைக்கு சென்று நிலமைகளை கள ஆய்விற்கு உட்படுத்தியுள்ளார்.
இந்நிலையில் குறித்த பகுதியில் “இருந்த சூழ்நிலையினை பேண வேண்டும்” என்று கடந்த 12.06.2022ஆம் திகதி நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மீறி அந்த இடத்தில் மேம்படுத்தல் வேலைகள் செய்யப்பட்டுள்ளதை ஆதரத்துடன் நிருப்பித்துள்ளதாக ஆதிசிவன் ஜயனார் ஆலயம் சார்பான சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.
நீதவான் உத்தரவு
இந்த விடயம் தொடர்பில் இன்று நீதவான் குருந்தூர் மலைப்பகுதிக்கு சென்று அங்கு நடைபெற்றுள்ள
விடையங்களை குறிப்பெடுத்துள்ளார்.
மேலும், இது தொடர்பாக பதில் அறிக்கையை வழங்குவது தொடர்பாக பொலிஸாருக்கும் தொல்லியல் திணைக்கத்திற்கும் அறிவுருத்தப்பட்டுள்ளதோடு, எதிர்வரும் 08.08.2023 அன்று இது தொடர்பான அறிக்கையினையும் மன்றில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
குருந்தூர் மலை விவகாரம் தொடர்பான விசாரணைகளுக்காக இன்று(04.07.2023) முல்லைத்தீவு நீதவான் நேரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
இதன்போது சரத் வீரசேகர உள்ளிட்ட அரசியல்வாதிகள் மற்றும் சட்டத்தரணிகள் பலர் குருந்தூர் மலைக்கு சென்றுள்ளனர்.
வழக்கு விசாரணை
குருந்தூர் மலை தொடர்பான வழக்கு விசாரணை இன்று முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
இந்நிலையில் முல்லைத்தீவு நீதவான், தொல்பொருள்திணைக் களத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் நேரில் சென்று ஆராய்ந்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |







இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri
