கொள்ளுப்பிட்டியில் மணமக்கள் சென்ற வாகனம் விபத்து: மூவர் வைத்தியசாலையில் அனுமதி
கொள்ளுப்பிட்டி - காலி வீதியின் ஸ்கூல் லேன் பகுதியில், மணமக்கள் சென்ற திருமண காரும் மற்றுமொரு காரும் வீதியில் பயணித்த மற்றுமொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் மணமக்கள் உட்பட ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை (15) இடம்பெற்றுள்ளதாக கொள்ளுப்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது விபத்தில் காயமடைந்தவர்களில் மணமகனும், மணமகளும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவில்லை எனவும், திருமண காரின் சாரதி, மற்றைய காரின் சாரதி ஆகியோர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பொலிஸார் விசாரணை
விபத்தில் காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்
கொள்ளுப்பிட்டி பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
பாகிஸ்தானின் அணுசக்தி நிலையத்தை தாக்க இந்தியா-இஸ்ரேல் ரகசிய திட்டம்: CIA அதிகாரி வெளியிட்ட தகவல் News Lankasri