கொக்குத்தொடுவாய் காணி விவகாரம் : ஆளும் தரப்பு வெளிப்படுத்திய தகவல்

Mullaitivu Sajith Premadasa Sunil Handunnetti Thurairajah Raviharan
By Shan Aug 20, 2026 05:05 AM GMT
Report

முல்லைத்தீவு - கரைதுறைபற்று பிரதேசசெயலகப் பிரிவிற்குட்பட்ட, கொகுத்தொடுவாய் மத்தி கிராம அலுவலர் பிரிவிலுள்ள குஞ்சுக்கால் வெளிபகுதியில் தமிழ் மக்களின் பூர்வீக வயல்நிலங்கள் ஆக்கிரபிக்கப்பட்டு தனியார் ஒருவரால் சட்டவிரோதமாக அத்துமீறி உப்பளம் அமைக்கப்படுகின்ற விடயம் தொடர்பில் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிடம் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் இவ்வாறு தமிழ் மக்களின் தனியார் வயல்காணிகளை அத்துமீறி சட்டவிரோதமாக ஆக்கிரமித்து தனியார் ஒருவர் உப்பளம் அமைக்கின்றமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தியிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.

அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம்

இதன்போது வன்னிப் பகுதியிலோ வடமாகாணத்திலோ தனியார் காணிகளை ஆக்கிரமித்து உப்பளங்கள் எதுவும் அமைக்கப்படவில்லை என அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் காணி விவகாரம் : ஆளும் தரப்பு வெளிப்படுத்திய தகவல் | Kokkuthoduvai Land Issue

அதற்கமைய குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனுடன் கலந்துரையாடி தகவல்களைப் பெற்றுக்கொண்டு, அந்தப் பிரச்சினை தொடர்பில் ஆராயப்படுமென அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார்.

அதனைத்தொடர்ந்து உரையாற்றும்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த விடயம் தொடர்பில் பின்வருமாறு கருத்துத் தெரிவித்திருந்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தில் உள்ள கொக்குத்தொடுவாய் கிராம அலுவலர் பிரிவில் அத்துமீறி அமைக்கப்படும் உப்பளம் தொடர்பாக கடந்த 6 மாதங்களாக முல்லைத்தீவில் குரல் எழுப்பி வருகின்றோம்.

இது தொடர்பில் மாவட்டச் செயலாளர், கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரால் தடுத்து நிறுத்துவதற்குரிய கடிதங்கள் உரிய தரப்பினருக்கு அனுப்பப்பட்டன.

இவ்வாறான அடாத்தான செயற்பாடுகளில் ஈடுபடுவது மகாவலி அதிகார சபை தான். இது தொடர்பாக கடந்த 03.12.2026 அன்று வவுனியா மாவட்டச் செயலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில்  அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் தெரியப்பட்டது.

சான்றுகளை உரிய தரப்பினருக்கு வழங்க

குறித்த பகுதி தனியார் காணியில் அமைக்கப்படவில்லை என மகாவலி அபிவிருத்தி அதிகார சபையினரால் அன்றைய தினம் குறிப்பிடப்பட்டது.

அமைச்சரால் இப்பிரச்சினையை மாவட்டச் செயலாளர் தலைமையில் ஆராயுமாறு அன்றைய நாள் அமைச்சரால் பணிக்கப்பட்டது.

கொக்குத்தொடுவாய் காணி விவகாரம் : ஆளும் தரப்பு வெளிப்படுத்திய தகவல் | Kokkuthoduvai Land Issue

பின்னர் எமது, கோரிக்கைக்கு அமைய , மாவட்டச் செயலாளர் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் ஆகியோரின் உத்தரவுக்கு அமைய குறித்த பகுதி தனியார் காணியே என நில அளவை அத்தியேட்சகரால் உறுதிப்படுத்தப்பட்டது.

அதன் அடிப்படையில், தனியார் காணியில் அமைக்கப்படும் மேற்படி உப்பளம் அமைக்கும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகத்துக்கு 28.07.2026 அன்று கடிதம் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளரால் கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பின்னரும் இலங்கை மகாவலி அதிகார சபை அதற்கு இணங்காத வகையில் தன்னிச்சையாக செயற்படுவதையே அவதானிக்க முடிகிறது.

மகாவலி அதிகார சபை இங்குள்ள அரசாங்கத்துக்கும் கட்டுப்படாமல் வடக்கு கிழக்கில் இனப்பரம்பலை மாற்றும் எண்ணத்தோடு தன்னிச்சையாக செயற்படும் ஓர் அமைப்பாகவே செயற்படுகிறது.

கொக்குத்தொடுவாய் மத்தி கிராம சேவையாளர் பிரிவில் அடாத்தாக அமைக்கப்பட்ட உப்பளமும் அதற்கு ஒரு சான்று என இப்பேரவையில் மீண்டும் பதிவுசெய்கிறேன்.

தேவைப்பட்டால் இவற்றுக்கான சான்றுகளை உரிய தரப்பினர்க்கு வழங்குவோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு

நடைபயணமாக அழைத்து வரும் ஷிரான் பாசிக்கின் உயிருக்கு ஆபத்து! நீதிமன்றம் பொலிஸாருக்கு பிறப்பித்த உத்தரவு

22ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

22ம் திருத்தச் சட்டமூலத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் 37 மனுக்கள் தாக்கல்!

மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கல்வியங்காடு, Scarborough, Canada

30 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US