இரு நாட்களுக்கு மூடப்படும் கொடுக்குளாய் - இயக்கச்சி அபாயவெளி பாதை

Kilinochchi Sri Lankan Peoples Northern Province of Sri Lanka
By Erimalai Oct 28, 2024 07:09 PM GMT
Report

வடமராட்சி - கிழக்கு கொடுக்குளாய் - இயக்கச்சி அபாய வெளியேற்றப் பாதை இரண்டு நாட்களுக்கு மூடப்படுவதால் மாற்று வழியை பயன்படுத்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் உறவுகள் மற்றும் அரசியல்வாதிகள், அயல் கிராம மக்களின் உதவியுடன் 78 இலட்சம் ரூபா செலவில் அமைக்கப்பட்ட கொடுக்குளாய் - இயக்கச்சி அபாயவெளி பாதை தற்பொழுது பயன்படுத்த முடியாத நிலையில் காணப்படுகிறது. 

கையிருப்பில் உள்ள சிறு நிதியை கொண்டு பள்ளங்களை கிரவல் மூலம் மூடுவதற்கு தீர்மானித்து இரண்டு நாட்களுக்கு குறித்த அபாயவெளி பாதை முற்றுமுழுதாக மூடப்படுகின்றது.

இது குறித்து ஊடகங்களுக்கு இன்று (28.10.2024) கருத்து தெரிவித்த உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும், கொடுக்குளாய் சக்திவேல் விளையாட்டு கழக தலைவருமாகிய கணேஸ்வரன் (கிட்டு) இந்த அபாயவெளி பாதை சில நாட்களுக்கு முன்பு திருத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட போது பெய்த கடும் மழையால் தற்காலிகமாக நிறுத்தியுள்ளோம்.

ரணிலின் பொய்யான தேர்தல் வாக்குறுதி: பகிரங்கப்படுத்தும் பிரதமர்

ரணிலின் பொய்யான தேர்தல் வாக்குறுதி: பகிரங்கப்படுத்தும் பிரதமர்

திருத்தம் செய்யும் பணி

இந்த வேலையை மேற்கொண்டு தொடர்வதற்காக நாளையும் (29) நாளை மறுதினமும் (30) இரு தினங்கள் அபாயவெளி பாதையை மூடி திருத்தம் செய்யும் பணியில் ஈடுபடவுள்ளோம்.

இரு நாட்களுக்கு மூடப்படும் கொடுக்குளாய் - இயக்கச்சி அபாயவெளி பாதை | Kodukkilai Iyakkachchi Road Closes For 2 Days

இந்த அபாயவெளி பாதையால் நாளாந்தம் இரண்டாயிரம் மக்களுக்கு மேல் பயணித்து வருவதால் இதை முற்றுமுழுதாக மூடுவதால் மக்கள் சிரமங்களை எதிர்நோக்குவார்கள். இதை மூடி திருத்தம் மேற்கொள்ளாவிடில் அபாய நேரத்தில் வெளியேற முடியாமல் பலர் உயிரிழக்க நேரிடும் என்பதால் இரண்டு நாட்களுக்கு பாதையை மூடவுள்ளோம்.

இந்த அபாயவெளி பாதை இருந்திருந்தால் வடமராட்சி கிழக்கில் சுனாமி அனர்த்தத்தின் போது உயிரிழந்த பலரின் உயிர் காப்பாற்றப்பட்டிருக்கும். இதனை கருத்தில் கொண்டு மேலும் இப்படியொரு சம்பவம் இடம்பெறக்கூடாது என்பதற்காக 78 இலட்சம் ரூபா செலவில் மக்கள் நாம் உருவாக்கினோம்.

இரு நாட்களுக்கு மூடப்படும் கொடுக்குளாய் - இயக்கச்சி அபாயவெளி பாதை | Kodukkilai Iyakkachchi Road Closes For 2 Days

வர்த்தக போக்குவரத்து, அரச ஊழியர்கள், பாடசாலை மாணவர்கள், மருத்துவ நோயாளிகள் என பலர் இந்த பாதையால் பயணிப்பதை அரசாங்கமும், அரசியல்வாதிகளும் அறிந்தும் கண்டு கொள்ளாமல் இருக்கின்றார்கள். 

ஒரு சில அரசியல்வாதிகள் ஆரம்பத்தில் சிறு உதவிகள் செய்த போதும் மேற்கொண்டு இந்த பாதையை புனர்நிர்மானம் செய்ய வேண்டிய தேவை இருப்பதால் ஒரு முறையாவது எமது பிரதேசத்திற்கு வந்து இந்த அவல நிலையை பார்வையிட வேண்டும் மழைக்காலம் என்பதால் அவசரமாக இந்த வீதியை கிரவல் கொண்டு செப்பனிட இருப்பதால் முடிந்தவர்கள் உதவி புரிந்து வடமராட்சி கிழக்கு மக்களின் உயிர் கேடயமாக காணப்படும் கொடுக்குளாய் - இயக்கச்சி பாதையை புனரமைப்பு செய்து தருமாறும் கேட்டுக் கொண்டுள்ளார். 

அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல்

அமெரிக்கர்களின் இலங்கைக்கான பயணத் தடை: வெளியான தகவல்

சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட தயாராகும் நெதன்யாகு!

சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட தயாராகும் நெதன்யாகு!

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
GalleryGalleryGallery
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
36ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

மல்லாகம், யாழ்ப்பாணம், கொழும்புத்துறை, சுண்டுக்குழி, Brampton, Canada

12 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அக்கரைப்பற்று

19 Sep, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Wembley, United Kingdom

18 Sep, 2024
மரண அறிவித்தல்

நெல்லியடி, India, Toronto, Canada

16 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி தெற்கு, உரும்பிராய் தெற்கு

24 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, Toronto, Canada

11 Oct, 2021
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, பரவிப்பஞ்சான்

18 Sep, 2015
மரண அறிவித்தல்

கட்டுவன், Southend-on-Sea, United Kingdom

09 Sep, 2026
மரண அறிவித்தல்

காரைநகர் தங்கோடை, Brampton, Canada

14 Sep, 2026
மரண அறிவித்தல்

இளவாலை மாரீசன்கூடல், Gennevilliers, France

11 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US