சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட தயாராகும் நெதன்யாகு!
காசாவுடனான போரை நிறைவுக்கு கொண்டுவந்தவுடன் அரபு நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகளை கைச்சாத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு(Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் இஸ்ரேலின் மிகப் பெரிய எதிரியான ஈரானையும் வெற்றிகொள்ளமுடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இஸ்ரேலிய நாடாளுமன்றில் இது தொடர்பில் கருத்து தெரிவித்த நெதன்யாகு,
சமாதான உடன்படிக்கை
“இஸ்ரேல் வீழ்ந்தால் முழு மத்தியகிழக்கு ஈரானின் வசப்படும். இதனை இலக்காக கொண்டே ஈரானும் செயற்படுகிறது.
இதற்கமைய புதிய எதிர்கால இலக்கை இஸ்ரேல் அடையும் நோக்குடன் அரபு நாடுகளுடன் சமாதான உடன்படிக்கைகளைப் பின்பற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
மேலும், நான் வழிநடத்திய செயல்முறையைத் தொடரவும், கூடுதல் அரபு நாடுகளுடன் சமாதானத்தை அடைவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளேன்'' என்றார்.
தீவிர இராஜதந்திர முயற்சி
தற்போதைய சுற்று மோதலுக்கு முன், இஸ்ரேல் மத்திய கிழக்கில் உள்ள சில அரபு நாடுகளுடன் தனது உறவுகளை மீட்டெடுக்க தீவிர இராஜதந்திர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த ஒப்பந்தங்களின் நகர்வுகள் 2020 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆபிரகாம் உடன்படிக்கைகள் மற்றும், பஹ்ரைன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் கையொப்பமிடப்பட்ட உயர்தர இயல்புநிலை ஒப்பந்தங்களை அடிப்படையாக கொண்டே மேற்கொள்ளப்டுள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |