யாழ்.ஜனாதிபதி மாளிகை விவகாரம்! ஆறு.திருமுருகன் வழங்கியுள்ள உபதேசம்

Jaffna Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakesh Dec 15, 2023 02:13 AM GMT
Report

யாழ்.கீரிமலையில் ஜனாதிபதி மாளிகையை அண்டியுள்ள சைவ சமய அடையாளங்கள் விடுவிக்கப்படாமல் தனியார் பல்கலைக்கழகம் என்னும் பெயரில் வழங்க முற்பட்டால் அதனை பெற்று சைவ சமயத்தின் சாபத்துக்கு ஆளாக எவரும் விரும்பக்கூடாது என்று தெல்லிப்பழை துர்க்கா தேவி தேவஸ்தானத்தின் தலைவரும் நல்லை ஆதீனத்தின் செயலாளருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், "யாழ்ப்பாணம் மாவட்டம், தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவில் நகுலேஸ்வரம், காங்கேசன்துறை கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கி மகிந்த ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட ஜனாதிபதி மாளிகை தமிழ் மக்களின் எதிர்ப்பால் பயன்படுத்தாமல் தவிர்த்து வந்தனர்.

யாழ்.ஜனாதிபதி மாளிகை விவகாரம்! ஆறு.திருமுருகன் வழங்கியுள்ள உபதேசம் | Kirimalai Releasing Saiva Religious Symbols

7 சைவ சின்னங்கள்

இருப்பினும் அதனை அண்டிய பகுதிகளை தொடர்ந்தும் ஆட்சி செய்யவும், தமக்கான நிதியீட்டலைத் தேடவும், தமிழர்களின் குறிப்பாக சைவ சமயத்தவர்களின் எதிர்ப்பை திசை திருப்பும் வகையிலும் அப்பகுதியை ஒரு தமிழரிடம் அதுவும் ஒரு சைவப் பெருமகனாரிடம் முதலீடு என்னும் பெயரில் வழங்கும் சூழ்ச்சி இடம்பெறுவதாகவே நாம் கருதுகின்றோம்.

எனவே, இப்பகுதியில் உள்ள 7 சைவ சின்னங்களும் விடுவிக்க நாம் எத்தனையோ முயற்சிகள் மேற்கொண்டும் இதுவரை நிறைவேறாத நிலையில் அப்பகுதிகளை பெற்று தொழில் புரிய எவர் முனைந்தாலோ அல்லது உறுதுணை புரிந்தாலோ அது சைவ சமயத்துக்கு செய்யும் பெரும் துரோகமாகவே நாம் பார்க்கின்றோம் என பகிரங்க வெளியில் கூறி வைக்க விரும்புகின்றோம்." என்று கூறியுள்ளார். 

யாழ். ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை: வெளியாகிய பகிரங்க அறிவிப்பு

யாழ். ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்தும் அரசாங்கத்தின் நடவடிக்கை: வெளியாகிய பகிரங்க அறிவிப்பு

வடிவேல் சுரேஷின் புதிய நியமனம்: கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து

வடிவேல் சுரேஷின் புதிய நியமனம்: கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து


மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US