ஆட்டம் காணப்போகும் அநுர - மஞ்சள் காவிக்குள் மறைந்திருக்கும் மர்மம் - பின்னணியிலுள்ள சதி
கொழும்பில் அரசாங்கத்திற்கு எதிராக பௌத்த துறவிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பின்னணியில் வலுவான அரசியல் நோக்கம் கொண்டு செயற்படுவதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
கடந்த இரண்டு வருடங்களில் சரியான பாதையில் செல்லும் சமகால அரசாங்கத்திற்கு எதிராக வலுவான மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயம் ராஜபக்சர்கள் உட்பட எதிர்க்கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மத ரீதியான பிரச்சினைகளை தீவிரமாக தோற்றுவித்து, இலங்கையில் அமைதியின்மைய ஏற்படுத்த ஒரு தரப்பினர் திட்டமிட்டு செயற்படுகின்றனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் போராட்டம்
அதன் ஒரு அங்கமாகவே, ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பௌத்த துறவிகள் நேற்று முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீதிமன்றத்தால் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட ஞானசார தேரரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து போராடுகின்றனர்.
சட்டம் அனைவருக்கும் சமமாக பாயும் எனும் கோட்பாட்டுடன் ஆட்சியை முன்னெடுக்கும் அநுரவுக்கு இதுவொரு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது.
இந்தத் பிரச்சினைக்கு விரைந்து உரிய தீர்வு எட்டத்தவறினால், இதுவொரு பாரிய போராட்டமாக வெடித்து, மற்றுமொரு அரகலயாக மாறும் அபாயம் தற்போது ஏற்பட்டுள்ளது.
மூவின மக்களும் வாழும் இந்த நாட்டினை தமது பௌத்த நாடு என சிங்களவர்கள் மார்த்தட்டிக் கொள்கின்றனர்.
பின்னணியிலுள்ள சதி
இந்நிலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரருக்கு வழமையான நடைமுறையின் கீழ் கைதிகளுக்கு வழங்கப்பட்ட ஆடைகள் வழங்கப்பட்டுள்ளன. காவி உடை அகற்றப்பட்டுள்ளது.

இந்த காவி உடை விவகாரம் தற்போது நாட்டிலுள்ள பௌத்தர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள ராஜபக்சர்கள் தலைமையிலான பல அரசியல் கட்சிகள் திரைமறையில் காய்நகர்த்தல்களை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ஜனாதிபதி செயலகத்தின் முன்னிலையில் பௌத்த துறவிகள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அடுத்து வரும் நாட்களில் நாடு முழுவதிலுள்ள மக்கள் பெரும் திரளாக இங்கு கூடும் வாய்ப்பு உள்ளது.
இதன்மூலம் அநுர அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து, தாம் தப்பித்துக் கொள்ள அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.
அரசியல்வாதிகளுக்கு மட்டுமன்றி, இலங்கையை அழிவுபாதைக்கு இட்டும் செல்லும் போதைப்பொருள் மற்றும் பாதாள உலக குழுவினருக்கு எதிராக இந்த அரசாங்கம் கடுமையானதும் துணிச்சலுமான நடவடிக்கையை எடுத்து வருகின்றது.
தற்போதைய நிலையில் பெருந்தொகை பணத்தை கொடுத்து, மற்றுமொரு அரங்கல போராட்டத்தை முன்னெடுக்க இந்த தீய சக்திகள் தயாராக இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.