வடிவேல் சுரேஷின் புதிய நியமனம்: கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமான் வாழ்த்து
ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேசிற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் நேரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அவர் தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது,
இலங்கையில் மலையக மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என குடியுரிமை பறிக்கப்பட்டு நாடாற்ற சமூகமாக மலையக மக்கள் புறக்கணிக்கப்பட்ட போதிலும், இன்று நாட்டின் ஜனாதிபதியின் ஆலோசகராக மலையக தமிழர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளமை ஒட்டுமொத்த மலையக மக்களுக்கும் பெருமையளிக்கும் விடயமாகும்.
வடிவேல் சுரேஷ் அவர்கள் தனது அரசியல் வாழ்க்கையை இலங்கை தொழிலாளர் காங்கிரசில் ஆரம்பித்து, மறைந்த தலைவர்களான அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் பாதையில் வளர்ந்தவர்.
தற்போது மலையகத்தில் மிக முக்கியமான தொழிற்சங்கமான LJWயின் பொதுச் செயலாளராக இருந்து இன்று ஜனாதிபதியின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளமை தனது கடின உழைப்பிற்கு கிடைத்துள்ள அங்கீகாரமாக கருதப்படுகிறது.
மேலும் அவருடைய இப்பதவி காலத்தில் மலையக மக்களுக்கு பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 6 நாட்கள் முன்

இனி Talk Of The Town ஆகப்போகிறது எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல்... காரணம் அவரின் என்ட்ரி தான், ஆனால்? Cineulagam

Bigg Boss 9: ஒங்க இஷ்டத்துக்கு இங்க இருக்க முடியாது.. ஆதிரையை வறுத்தெடுக்கும் விஜய் சேதுபதி- எதற்காக? Manithan
