மொட்டு கட்சியின் பலம் இன்று நிரூபிக்கப்படும்: சாகர காரியவசம் ஆரூடம்
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் பலம் இன்றைய தினம் நிரூபிக்கப்படும் என கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
தெற்கு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா பொதுஜன முன்னணியின் இரண்டாம் பேராளர் மாநாடு இன்றைய தினம்(15.12.2023) நடைபெறவுள்ளது.
பசில் ராஜபக்சவின் தலைமை
இதற்கமைய சுகததாச உள்ளக அரங்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த நிகழ்வில், முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் தலைமை தாங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
கட்சியை வெற்றியை நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டம் இன்றைய மாநாட்டில் வெளிப்படுத்தப்படும் என சாகர காரியவசம் மேலும், தெரிவித்துள்ளார்.
இதன்படி கட்சியின் யாப்பில் சில திருத்தங்கள் செய்யப்பட உள்ளதாகத் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

சர்வதேச அரசியலில் ஈழத் தமிழர்களின் பயணப்பாதை 3 நாட்கள் முன்

viral video: நபரொருவரின் சப்பாத்தை பதம் பார்த்த ராஜ பழுப்பு பாம்பு... மெய்சிலிர்கும் காட்சி! Manithan
