கிளிநொச்சி பசுமைப்பூங்கா சந்திரன் பூங்காவாக மாற்றம் - சபையில் தீர்மானம்
கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபையின் இரண்டாவது சபை அமர்வு நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.
சபை தீர்மானங்களை மக்களுக்கு அறிவிக்கும் முகமாக தவிசாளரால் ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட சபையின் தீர்மானம் தொடர்பான குரல் பதிவில் தெரிவித்துள்ளார்.
தீர்மானம் நிறைவேற்றம்
சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாக கிளிநொச்சி சேவை சந்தையில் தற்காலிக கொட்டகைகளில் வியாபாரம் நடாத்தி வரும் வர்த்தகர்கள் 72 பேருக்கான கடைத்தொகுதி அமைப்பதற்காக 120 மில்லியன் ரூபா விடுவிக்கப்படுவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முரசுமோட்டை பகுதியில் பிரதேச சபையின் புதிய உப அலுவலகம் நிர்மாணிப்பதற்கு 20 மில்லியன் ரூபா விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கிளிநொச்சி நகரத்தில் மின் தகன மயானம் புலம்பெயர்ந்தோர் மற்றும் கிளிநொச்சி வர்த்தகர்களின் நிதியில் நிர்மாணிக்கப்பட்டு இறுதி வேலைகள் மேற்கொள்வதற்காக 15 மில்லியன் ரூபா விடுவிப்பதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
பசுமைப்பூங்காவை சந்திரன் பூங்காவாக.பெயர் மாற்றுவது தொடர்பாக ஏக மனதாக தீர்மானிக்கப்பட்டது.
எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவுள்ள 15வேலைத்திட்டங்களுக்குமான தீர்மானம் ஏக மனதாக நிறைவேற்றப்பட்டது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





உயிருக்கு பதில் உயிர்தான் வேண்டும்: கேரள செவிலியர் வழக்கில் ஏமன் குடும்பம் வலியுறுத்தல் News Lankasri

பெண்கள் பதிலடி கொடுத்தும் அடங்காத குணசேகரன், தர்ஷனுக்கு வைத்த செக்... எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam
