சூடு பிடிக்கும் செவ்வந்தி விவகாரம்! ஐரோப்பாவில் சிக்கப்போகும் தமிழர்கள்
தற்போது முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு கொண்டு இருந்தாலும் அதை விட ஆபத்தான முக்கிய நபர்கள் இலங்கைக்குள் மறைந்து இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைதான இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்த வீட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பு பயன்படுத்திய இரண்டு கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கொழும்பு குற்றப்பிரிவினரால் கண்டுபிடிக்கப்பட்டதாக தென்னிலங்கை ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தநிலையிலே இஷாரா செவ்வந்தி யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றில் தங்கி இருந்து விட்டு பின்னர் அங்கிருந்து தான் நேபாளத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து, பாதாள உலகக் குழுவோடும், போதைப்பொருள் கடத்தல்காரர்களோடும் வடக்கு, கிழக்கில் இருக்கக் கூடிய பலர் தொடர்பில் இருந்து இருக்கின்றார்கள் எனக் கூறப்படுகின்றது.
அதுமட்டுமன்றி கெஹெல்பத்தரவினால் ஜே.கே பாயிற்கு ஒன்றரை கோடி பெறுமதியான போதைப்பொருட்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், இந்த ஒன்றரை கோடி பெறுமதியான போதைப்பொருள்கள் வடக்கு ,கிழக்கில் பகிரப்பட்டு இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,...
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |