மலேசியாவில் நடனமாடிய டொனால்ட் ட்ரம்ப்! இணையத்தில் பரவலாகி வரும் காணொளி
2025 ம் ஆண்டுக்கான ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் ஆரம்பமாகியுள்ள நிலையில், மலேசியா வந்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நடனமாடிய காணொளி தற்போது இணையத்தளங்களில் பரவி வருகின்றது.
2025 ம் ஆண்டுக்கான ஆசியான் உச்சி மாநாடு மலேசியாவில் நேற்றையதினம்(26) தொடங்கி நடைபெற்று வருகின்றது.
சிவப்பு கம்பள வரவேற்பு
இந்த மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றுள்ள நிலையில் அவருக்கு சிவப்பு கம்பளத்துடன் பாரம்பரிய முறையில் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

அதனை பார்த்து உற்சாகமடைந்த டொனால்ட் ட்ரம்ப் நடனடிமாடியுள்ளார்.
மலேசியா பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அமைச்சர்கள் டொனால்ட் ட்ரம்பை வரவேற்றனர். மேலும் பாரம்பரிய முறையில் வாத்தியங்கள், இசை நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன.
Donald Trump dances when he arrives in Malaysia pic.twitter.com/saZb3qoQJo
— liberty in america (@libertyinam) October 26, 2025
நடன கலைஞர்கள் நடனமாடி ட்ரம்பை வரவேற்றனர். இதனை பார்த்து உற்சாகமான டொனால்ட் ட்ரம்ப் விமானத்தில் இருந்து இறங்கி நேரடியாக நடன கலைஞர்கள் அருகே சென்று நடனமாடினார்.
அவருடன் சேர்ந்து மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமும் நடனமாடினார். இந்த காணொளி தற்போது இணையதளங்களில் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளார்.
டொனால்ட் ட்ரம்ப் பொது வெளியில் இப்படி நடனமாடுவது இது முதல் முறையல்ல.
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் கூட டொனால்ட் ட்ரம்ப் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார்.
ட்ரம்பின் நடனம்
அதேபோல் மலேசியா வந்த ஜனாதிபதி ட்ரம்புக்கு அந்த நாட்டின் இராணுவம் சார்பில் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.

மலேசியாவின் போர் விமானங்கள் ட்ரம்பின் ‛ஏர் போர்ஸ் ஒன்' விமானத்தின் இருபுறமும் சூழ்ந்து பறந்து வந்து அமெரிக்கா, மலேசியாவின் உறவை காட்டும் வகையில் இருநாடுகளின் கொடியையும் வானில் பறக்க விட்டது அனைவரையும் கவர்ந்தது. இந்த மாநாட்டில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பல்வேறு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.
அதேபோல் மலேசியா பிரதமர் உடனும் இருநாடுகளின் உறவு பற்றி அவர் விவாதிக்க உள்ளார். மலேசியா சுற்றுப்பயணத்தை முடிக்கும் டொனால்ட் ட்ரம்ப் அங்கிருந்து நேரடியாக ஜப்பான் செல்லவுள்ளார். ஜப்பான் புதிய பிரதமர் சானே தகைசியை அவர் சந்தித்து பேச உள்ளார்.
பிறகு தென்கொரியா சென்று அங்கு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை சந்தித்து இருநாடுகள் இடையேயான வர்த்தகம் பற்றி விவாதிக்க உள்ளார்.
அதேபோல் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன்-னை கூட அவர் சந்தித்து பேசலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தென்கொரியாவும், அமெரிக்காவும் எதிரி நாடாக உள்ள நிலையில் ட்ரம்பின் இந்த சுற்றுப்பயணம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam