தென் சீன கடலில் விபத்தில் சிக்கிய அமெரிக்க போர் விமானம்- உலகுவானூர்த்தி
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள சூழலில் அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான விமானம் தாங்கி கப்பலான யுஎஸ்எஸ் நிமிட்ஸில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானமும் உலகுவானூர்த்தியும் தென் சீனக் கடலில் 30 நிமிட இடைவெளியில் விபத்துக்குள்ளாகியுள்ளன.
விபத்துக்குள்ளான எம்ஹெச்-60ஆர் சீ ஹாக் உலகுவானூர்த்தியின் மூன்று பணியாளர்களும், எஃப்/ஏ-18எஃப் சூப்பர் ஹார்னெட் போர் விமானத்தின் இரண்டு விமானிகளும் விபத்துக்கு முன் பாதுகாப்பாக வெளியேறியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
வர்த்தக போர்
இரண்டு விபத்துகளுக்கான காரணங்களும் விசாரிக்கப்பட்டு வருவதாக அமெரிக்க கடற்படை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த நேரத்தில் விமானம் அங்கு என்ன செய்து கொண்டிருந்தது என்பது குறித்து குறிப்பிடவில்லை.
இராணுவப் பயிற்சியின் போது விபத்து நடந்ததாக சீனாவின் வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அமெரிக்காவும் சீனாவும் வர்த்தக போரில் ஈடுபட்டுள்ள சூழலில் தென் சீனக் கடலில் அமெரிக்க இராணுவ விமானமும் உலகுவானூர்த்தியும் இருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
இந்த வாரம் தென் கொரியாவில் நடைபெறும் மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பும் சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கும் சந்திக்க உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri