போதைப்பொருளுடன் கைதானவருக்கு மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை
முல்லைத்தீவு பகுதியில் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட முதியவருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் மூன்று வருட கடூழிய சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
மேலும் அவருக்கு, மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது
முல்லைத்தீவு பகுதியில் 973 மில்லிக்கிறாம் ஐஸ் போதைப்பபொருவைத்திருந்தமை அதனை விற்பனை செய்ய முற்பட்டமை போன்ற குற்றச்சாட்டுக்களில் முல்லைத்தீவு பொலிஸாரால் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபரையும் சான்றுப்பொருட்களையும் முலலைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
குறித்த வழக்கானது ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திலும் தொடர்ப்பட்ட நிலையில், சட்டமா அதிபர் திணைக்களத்தினால் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
வழக்கின் விசாரணைகள் நிறைவு
குறித்த வழக்கின் விசாரணைகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஜி அலெக்ஸ்ராஜா முன்னிலையில் தீர்ப்புக்காக எடுத்துக்கொள்ளப்பட்டதுடன், சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் அரச சட்டத்தரணி எஸ்.அர்ஜின்குமார் முன்னிலையாகியிருந்தார்.
இதன்போது சந்தேகநபர் முன்குற்றம் எதனையும் கொண்டிருக்காமை அவரது வயது முதுமை என்பவற்றை கவனத்தில் எடுத்த மன்று முதலாவது குற்றச்சாட்டிற்கு மூன்று ஆண்டு கால கடூழிய சிறைத்தண்டனையும், மூன்று இலட்சம் ரூபா தண்டப்பணமும் விதித்ததுடன், இரண்டாவது குற்றச்சாட்டுக்கும் மூன்று ஆண்டுகால கடூழிய சிறைத்தண்டனையும் வித்துள்ளதுடன் இரு கடூழிய சிறைத்தண்டனைகளையும் ஏக காலத்தில் அனுபவிக்குமாறும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.