கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய உள்ளீடுகள் மற்றும் வாயுத் துப்பாக்கிகள் வழங்கி வைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் விவசாய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் மூலம் விவசாயிகளுக்கான விவசாய உள்ளீடுகள் மற்றும் வாயுத் துப்பாக்கிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
கிளிநொச்சி மாவட்டத்தின் பெரும்போக உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் உவர் நிலங்களில் நெற்செய்கையை ஊக்குவிக்கும் வகையில் 05 விவசாயிகளுக்கு விதை நெல் மற்றும் வீட்டுத் தோட்டசெய்கையை மேம்படுத்தும் வகையிலும் சிறுதானிய செய்கைகளை ஊக்கு வைக்கும் வகையில் விதை தானியங்கள் உள்ளிட்ட விவசாய உள்ளீடுகள் வழங்கி வைக்கப்பட்டன.
அத்துடன் விவசாய பயிர்களை பாதுகாக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஐந்து விவசாயிகளுக்கு வாயு துப்பாக்கிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மேற்படி நிகழ்வு இன்று (10-09-2025) மாவட்ட பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் அலுவலகத்தில் மாகாண பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் வி. சோதிலட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இதில் மாவட்ட அரச அதிபர் எஸ் முரளிதரன் மாவட்ட விவசாயத் துறை சார்ந்த திணைக்களங்களின் தலைவர்கள் பதவி நிலை உத்தியோகத்தர்கள் விவசாயிகள் என பலர் கலந்து கொண்டனர்.





அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 3 நாட்கள் முன்

Singappenne: அன்பு, ஆனந்தியின் புதிய திட்டம்- உதவி செய்யும் யாழினி.. பயந்து நடுங்கும் துளசி Manithan

குப்பையில் இருந்து சாப்பிட்டு.., அம்பானி திருமணத்தில் வேலை செய்து ரூ.50 சம்பாதித்த நடிகை யார்? News Lankasri

ஜனனி, சக்திக்கு ஷாக் கொடுக்கும் வகையில் தர்ஷன் கூறிய வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் புரொமோ Cineulagam
