கொலம்பியாவில் துப்பாக்கி முனையில் கடத்தல் : தப்பியோடிய தொழிலதிபர்
கொலம்பியா நாட்டில் இடம்பெற்ற கடத்தல் சம்பவமொன்றில் இருந்து தொழிலதிபர் ஒருவர் தப்பியமை தொடர்பான காணொளி தற்போது அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
கொலம்பிய தலைநகர் பொகோட்டாவில் (Bogota) உள்ள வர்த்தக கட்டிடம் ஒன்றுக்கு அருகே , 33 வயதுடைய நபர் ஒருவர் தனது காரில் இருந்து இறங்கியபோது, நோயாளர் காவு வண்டியில் வந்த நபர் அவரை துப்பாக்கி முனையில் கடத்தி சென்றுள்ளார்.
கடத்தலுக்கு உதவியாக இருந்த மற்றொரு நபரும் நோயாளர் காவு வண்டிக்குள் அவரை தள்ளியுள்ளார்.
பொலிஸ் அறிக்கை
இதன்பின்னர் குறித்த வாகனம் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளது. எனினும் கடத்தப்பட்ட நபர் வாகனத்திற்கு வெளியே குதித்து தப்பியுள்ளார்.
இந்த நிலையில், ரியல் எஸ்டேட்டில் நிபுணத்துவம் பெற்ற 33 வயது தொழிலதிபருக்கு எந்தவித அச்சுறுத்தலும் வரவில்லை என்றும், கடத்தல்காரர்கள் அவரது நடமாட்டத்தை பின்தொடர்ந்து வந்ததாகவும் அந்நாட்டு பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
காணொளியை காண இங்கே கிளிக் செய்யவும் |
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |