இந்தியாவில் இருந்து நாடுகடத்தப்பட்ட கெசல்வத்தே தினுஷ.. 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு
பாதாள உலக குற்றவாளி எனக் கூறப்படும் கெசல்வத்தே தினுஷவுக்கு 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கைது செய்யப்பட்டு, அண்மையில், இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட குறித்த நபர் தொடர்பாக நடத்தப்படும் விசாரணைகள் குறித்து கெசல்வத்தே பொலிஸார் இன்று (27) கொழும்பு தலைமை நீதவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தனர்.
இந்த வழக்கு கொழும்பு தலைமை நீதவான் அசங்க.எஸ். போதரகம முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
விசாரணை அறிக்கை
கெசல்வத்தே பொலிஸ் பொறுப்பதிகாரி, நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்தபோது, சந்தேக நபரை 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதன்படி, கொலை, கொள்ளை மற்றும் காயப்படுத்துதல் உள்ளிட்ட எட்டு குற்றச் சம்பவங்கள் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தனர்.
பின்னர் வழக்கை பிப்ரவரி 14 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க உத்தரவிட்டார்.
You may like this..
பல வருடங்களுக்கு பிறகு சந்தித்துக்கொண்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலங்கள்... யார் யார் பாருங்க Cineulagam
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
ரவி-நீது பிரச்சனையில் ஸ்ருதி எடுத்த அதிரடி முடிவு, பிரச்சனையில் குடும்பம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு எபிசோட் Cineulagam