புதுக்குடியிருப்பு பகுதி கிணற்றுக்குள் மண்ணெண்ணெய் : நீதிமன்றம் விடுத்த உத்தரவு
புதுக்குடியிருப்பு - உடையார்கட்டு, குரவில் கிராமத்தில் கிணற்றினை இறைக்கும் போது கிணற்றில் இருந்து மண்ணெண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவொன்றை பிறப்பித்துள்ளது.
கடந்த 07.01.2024 அன்று குறித்த கிராமத்திலுள்ள கிணற்றினை இறைக்கும் வேளை கிணற்றில் இருந்து மண்ணெண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ள நிலையில் அதன் எரிபற்று நிலையை அடிப்படையாகக் கொண்டு கிராமவாசிகளால் அது மண்ணெண்ணெய் என உறுதிப்படுத்தப்பட்டது.
பெரும் சிரமங்கள்
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸார் அப்பகுதி வீட்டிற்கு சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வழக்கினை கடந்த 09.01.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.
இதன்போது கிணற்றில் இருந்து எடுக்கப்பட்ட நீரில் மண்ணெண்ணெய் கலந்திருப்பது தொடர்பாக கனிய வள எண்ணெய் கூட்டுத்தாபனத்திடம் பரிசோதனை செய்து அறிக்கையினை 24.02.2024 அன்று நீதிமன்றிற்கு சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வீட்டின் உரிமையாளர்கள் குடிதண்ணீரை பெற்றுக்கொள்வதிலும் குளிப்பதிலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




