பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் நிரூபிக்கப்பட்டால் மில்லியன் ரூபாய் அபராதம்
இலங்கையின் நாடாளுமன்றில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தின்படி, பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரின் குற்றம் நிரூபிக்கப்பட்டால், இருபது ஆண்டுகள் வரையிலான கடூழிய சிறைத்தண்டனை மற்றும் 1 மில்லியன் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, நெடுஞ்சாலையிலோ அல்லது பொது இடத்திலோ மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்துடன் தொடர்புடைய குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தில் குற்றவாளியாகக் கருதப்படும் ஒருவருக்கு இந்த தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் மாத்திரமன்றி விமானம் அல்லது கப்பலில் மேற்கொள்ளப்படும் குற்றங்கள் தொடர்பிலும் சட்டத்தை நடைமுறைபடுத்துவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஆயுள் தண்டனை
இந்த யோசனையின்படி, கொலை, காயம், பணயக்கைதிகள் அல்லது கடத்தல் ஆகியவையும் குற்றமாகுமாகவே கருதப்படும்.
பொது அல்லது தனியார் சொத்துக்களுக்கு கடுமையான சேதம் விளைவிப்பது, பொதுமக்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான ஆபத்தை உருவாக்குவது மற்றும் எந்தவொரு மத அல்லது கலாசார சொத்துக்களையும் அழிப்பது அல்லது தீவிரமாக சேதப்படுத்துவது ஆகியவையும் குற்றமாகும்.
அத்துடன் இந்தச் சட்டமூலத்தின்படி, கொலைக் குற்றத்திற்காக மேல் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
அத்தோடு, நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ச இந்த சட்டமூலத்தை நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

தமிழ் தலைவர்கள் பெற்றது எதுவுமில்லை ஆயினும் வாய்ச் சொல்லில் வீரரடி..! 18 மணி நேரம் முன்

Optical illusion: படத்தில் '44' மற்றும் '33' என்ற மாறுபட்ட இலக்கங்களில் '88' எங்கே மறைந்துள்ளது? Manithan

யூடியூப் வீடியோவுக்காக காதலருடன் நெருக்கம் காட்டிய பெண்: கணவர் கண்டித்ததால் எடுத்த பயங்கர முடிவு News Lankasri

இன்று விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே திருமணம் முடிந்தது.. புதிய ஜோடியின் போட்டோ இதோ Cineulagam
