மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமத்துவத்தால் ஏற்பட்டுள்ள தொற்றுநோய் அபாயம்
மன்னார் நகர சபையின் முறையற்ற கழிவு முகாமைத்துவ செயற்பாட்டினால் தொற்றுநோய்
பரவும் அபாயம் காணப்படுவதாக சாந்திபுரம் கிராம மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
மன்னார் நகர சபை எல்லைக்குள் சேகரிக்கப்படும் கழிவுகள் முறையற்ற விதமாக சாந்திபுரம் காட்டுப்பகுதிக்குள் கொட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், டெங்கு நோய் உட்பட பல்வேறு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, சாந்திபுரம் கிராம மக்களால் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
திறனற்ற கழிவு முகாமைத்துவம்
அத்துடன், மன்னார் நகரசபை முன்னதாக, பாப்பா மோட்டை பகுதியில் உள்ள திண்ம கழிவகற்றல் நிலையத்தில், குப்பைகள் ஒழுங்கான முறையில் தரம் பிரித்து களஞ்சியப்படுத்தப்படாமலிருந்தது.
தொடர்ந்து, கொழும்பை சேர்ந்த அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் வழக்கு தொடரப்பட்டதையடுத்து, குறித்த பகுதியில் திண்ம கழிவுகளை சேகரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் மன்னார் நகரசபைக்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில், இந்த தீர்ப்பை காரணம் காட்டி, மன்னார் நகரசபை, நீண்ட நாட்களாக மன்னார் நகர பகுதியில் கழிவு முகாமைத்துவ செயற்பாடுகளை மேற்கொள்ளாமல் இருந்ததால் நகரமே சுகாதார சீர்கேடுகளுக்கு உள்ளாகியிருந்தது.
இந்நிலையில், ஏற்கனவே சாந்திபுரம் பகுதியில், முறையற்ற விதமாக, மிருகங்களின் உடல் பாகங்கள் மற்றும் மருத்துவ கழிவுகள் உள்ளடங்கிய குப்பைகள் கொட்டப்பட்ட நிலையில், மக்களின் எதிர்ப்பை அடுத்து குறித்த செயற்பாடு நிறுத்தப்பட்டிருந்தது.
மக்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
மீண்டும், மக்களின் எதிர்ப்பை மீறி நகர சபை, திண்ம கழிவுகளை அனுமதியின்றி தரம் பிரிக்காது சாந்திபுர காட்டுபகுதிக்குள் கொட்டுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
குறிப்பாக உக்காத குப்பைகளையும் இலத்திரனியல் கழிவுகளையும், நீர் நிலைகளுக்குள்ளும் பள்ளங்களுக்குள்ளும் நகரசபை கொட்டி நிரப்பி வருகின்றது.
இதன் காரணமாக, சாந்திபுரம் பகுதியில் தொற்று நோய்கள் பரவுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளமையினால் உடனடியாக நகரசபையின் குப்பை கொட்டும் செயற்பாட்டை நிறுத்துமாறும் கொட்டிய குப்பைகளை உரிய விதமாக அகற்றுமாறும் மக்கள் கூறியுள்ளனர்.
இல்லாவிட்டால், மக்களை திரட்டி நகர சபைக்கு முன்பாக போராட்டம் ஒன்றை முன்னெடுக்க உள்ளதாகவும் சாந்திபுரம் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
