மன்னாரில் பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்பு
முருங்கன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் இருந்து பல கோடி ரூபா பெறுமதியான கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.
குறித்த சம்பவம் நேற்று முன் தினம் (3) காலை இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டு முருங்கன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
விசேட தேடுதல் நடவடிக்கை
மன்னார் பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் முருங்கன் பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் இணைந்து மன்னார் - நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் கடற்கரை பகுதியில் விசேட தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது 25 மூட்டைகளில் பொதி செய்யப்பட்ட 398 சிறிய பொதிகளைக் கொண்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா 906 கிலோகிராம் எடை கொண்டது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும் சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணை
கைப்பற்றப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் முருங்கன் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மேலதிக விசாரணைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை மன்னார் வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் சாமந்த விஜய சேகர முருங்கன் பொலிஸ் நிலையத்திற்கு இன்று புதன்கிழமை (3) காலை விஜயம் செய்து மீட்கப்பட்ட கஞ்சா பொதிகளை பார்வையிட்டதோடு,பொலிஸார் மற்றும் கடற்படையினருடன் கலந்துரையாடியுள்ளார்.



விறுவிறுப்பாக11 மணிநேரம் நடைபெற்ற வாக்குப்பதிவு! ஆறு மணி கடந்து வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு
தமிழ்நாடு அரசியல் களத்தை அதிரவைத்துள்ள மாபெரும் புரட்சி! அதிரடி திருப்பங்களுடன் வெளியாகவுள்ள இறுதி முடிவுகள்
கனேடிய பொலிஸாரின் அலட்சியத்தால் பலியான யாழ். இளைஞனால் 6 பேருக்கு மறுவாழ்வு.. உடலை காண காத்திருக்கும் தாய்
வாய்ப்பே இல்லை... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் ட்ரம்பிற்கு அடுத்த நெருக்கடி அளித்த ஈரான் News Lankasri
ஆண்களுடனான உறவைத் தவிர்ப்பது பெண்களுக்கு நல்லது... ஜேர்மனியில் சர்ச்சையை உருவாக்கியுள்ள நபர் News Lankasri
வரும் திங்கள் முதல் விஜய் டிவியின் சில சீரியல்களின் நேரம் மாற்றம்... எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam