தமிழினத்தின் சாபக்கேடு அர்ச்சுனா - நாடாளுமன்றத்தில் அமைச்சர் வெளியிட்ட தகவல்
நாடாளுமன்றத்தில் அவசியமற்ற, கேவலமான மற்றும் வக்கிரமான முறையில் நடந்துகொள்ளும் உறுப்பினர்கள் ஒன்றிரண்டு பேர் உள்ளனர் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அவர்கள் மனநோயாளி என்பதால் பொறுமையுடன் இருக்கிறேன் என நாடாளுமன்றத்தில் இன்று(23.07.2026) உரையாற்றும் போது அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் ஒழுங்கு தொடர்பான பிரச்சினை ஒன்றை எழுப்ப முயற்சித்த போதே மேற்கண்டவாறு பதிலளித்துள்ளார்.
தமிழ் மக்களுக்கே அவமானம்
அதற்கு பதிலளித்த அமைச்சர், “அர்ச்சுனா எம்.பி தமிழ் மக்களுக்கே அவமானம் சேர்க்கும் ஒரு நபர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது நடந்துகொண்ட விதத்தை அவதானித்தீர்களா? அவை மைக் மூலம் கேட்காமல் இருக்கலாம். காணொளிகளிலும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், இந்த நாடாளுமன்றத்தின் நான்கு சுவர்கள் தான் சாட்சியாகும்.

அவர் நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, வெளியே செல்லும்போது நடந்துகொள்வதும் இப்படித்தான். யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் கூட்டத்தை இன்று நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு அருகில் இருக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் குமார் பொன்னம்பலம், சபாநாயகருக்குக் கடிதம் ஒன்றை கையளித்துள்ளார்.
முன்னர் சபாநாயகர் கரு ஜெயசூரியவை இங்கிருந்த நாற்காலிகளால் தாக்கியுள்ளனர். ஆனாலும், இந்தளவுக்குக் கேவலமான முறையில் யாரும் பேசியதில்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
நிலையியற் கட்டளை
இதன்போது அர்ச்சுனா இராமநாதன் ஏதோ கூற முயற்சித்துள்ளார். மடையனைப் போன்று நடந்துகொள்ள வேண்டாம். நாடாளுமன்றத்தை நகைச்சுவையாக மாற்ற வேண்டாம் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
அர்ச்சுனா எம்.பி. என்னை குறித்து இதற்கு முன்பும் அவதூறான முறையில் பேசியுள்ளார் என சபாநாயகர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், அங்கு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, உறுப்பினர் ஒருவருக்குத் தகுதியற்ற வகையில் பேசுவது பொருத்தமானதல்ல என தெரிவித்துள்ளார்.
அத்துடன், “மடையனைப் போன்ற கதைகளைக் கூற வேண்டாம் எனக் கூறுவதைத் தவிர்க்கவும். நீங்கள் நிலையியற் கட்டளைகளைத் தெரிந்து கொண்டு வாருங்கள்.
பிமல் ரத்நாயக்க, குமார் பொன்னம்பலம் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் பற்றிக் கூறினார். இங்கு அத்தகையதொரு நாடாளுமன்ற உறுப்பினர் இல்லை.
இங்குள்ளவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி, குமார் பொன்னம்பலத்தின் மகனாவார்” என சஜித் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இதனையடுத்து குறுக்கிட்ட அர்ச்சுனா எம்.பி, நான் சைக்கோவாக இருக்கலாம். ஆனால், ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என சபையில் தெரிவித்தார்.