கணவனை பிரிந்து வாழ்ந்த பெண்ணை கொலை செய்த மர்ம நபர்
அனுராதபுரம், இராஜாங்கனை பொலிஸ் பிரிவின் அங்கமுவ பகுதியில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்தக் கொலை சம்பவம் நேற்று இரவு நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் யாய 08, அங்கமுவ பகுதியை சேர்ந்த 49 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
கணவனுடனான குடும்பத் தகராறு காரணமாக, அந்தப் பெண் தனது மூத்த மகன் மற்றும் மகளுடன் சுமார் 08 மாதங்களாக தாயின் வீட்டில் வசித்து வந்துள்ளார்.
குடும்பத் தகராறு
கணவர் தனது இளைய மகனுடன் நேற்று திருமண விழாவில் கலந்து கொள்ள மூத்த மகனை அழைத்துச் சென்றுள்ளார்.
மேலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணையில், குறித்த பெண் நேற்று இரவு அவரது தாயின் வீட்டின் முன் யாரோ ஒருவரால் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
கொல்லப்பட்ட பெண்ணின் சடலம் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் சந்தேக நபர்களைக் கைது செய்ய இராஜாங்கனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





ஏவுகணைகள் பொறுத்தப்பட்ட கவச ரயில்! ஆடம்பரம் நிறைந்த 90 பெட்டிகள்: சீனா புறப்பட்ட கிம் ஜாங் உன் News Lankasri

காருக்குள் 45 நிமிடம் உரையாடிய புடின் - மோடி: அமெரிக்காவின் டிரம்புக்கு உருவாகும் புதிய அழுத்தம்! News Lankasri

தர்ஷன் திருமணத்தின் சிக்கல்களுக்கு நடுவில் ஜீவானந்தம் பார்கவிக்கு கொடுத்த பரிசு... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

வயிறு குலுங்க சிரித்த புடின், மோடி, ஷி ஜின்பிங்: திருதிருவென முழித்த பாகிஸ்தான் பிரதமர்: பறக்கும் மீம்ஸ்கள்! News Lankasri
