உகண்டாவிற்குள் நுழைய கென்யாவின் முன்னாள் நீதி அமைச்சருக்குத் தடை
கென்யாவின் முன்னாள் நீதி அமைச்சரும், முன்னணி சட்டத்தரணியுமான மார்த்தா கருவா உகண்டா நாட்டிற்குள் நுழைய அந்நாட்டு அதிகாரிகளால் தடை விதிக்கப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
உகண்டாவின் என்டெபே சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், அங்குள்ள அதிகாரிகளால் தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் அவரது கைபேசி அணைக்கப்பட்ட நிலையில் யாருடனும் தொடர்புகொள்ள முடியாதவாறு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் தெரிவித்துள்ளது.
உகண்டா மற்றும் கென்ய அரசுத் தரப்பில்
உகண்டாவில் தேசத்துரோகக் குற்றச்சாட்டின் கீழ் இராணுவ நீதிமன்றத்தில் விசாரணை எதிர்கொண்டு வரும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் கிஸா பெசிகே மற்றும் அவருக்கு ஆதரவாக வாதாடி, தற்போது அதே போன்றதொரு குற்றச்சாட்டில் சிறையிலடைக்கப்பட்டுள்ள உகண்டா சட்டத்தரணி எரியாஸ் லுக்வாகோ ஆகியோரது சட்டப் பாதுகாப்புக் குழுவில் இணைவதற்காகவே மார்த்தா கருவா அங்கு சென்றிருந்தார்.

மார்த்தா கருவாவுடன் பயணித்த கென்ய சட்டத்தரணிகள் சங்கத் தலைவர் சார்லஸ் கஞ்சாமாவுக்கு உகாண்டாவிற்குள் நுழைய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், ஒரே நோக்கத்திற்காக வந்த மற்றொரு வழக்கறிஞரான கருவாவுக்கு மட்டும் முறையான காரணங்கள் ஏதுமின்றி அனுமதி மறுக்கப்பட்டிருப்பது பெரும் கவலையளிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு ஆபிரிக்க நாடுகள் தங்களுக்கு எதிரான மாற்றுக்கருத்துகளை ஒடுக்குவதற்காக ஒன்றிணைந்து செயல்படுகின்றனவா என்ற விவாதத்தை இந்த நிகழ்வு தூண்டியுள்ளது.
மார்த்தா கருவா கடந்த ஆண்டும் இதேபோல எதிர்க்கட்சித் தலைவர் ஒருவரின் வழக்குக்காகத் தான்சானியா சென்றிருந்தபோது அங்கிருந்தும் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து உகண்டா மற்றும் கென்ய அரசுத் தரப்பில் இதுவரை அதிகார பூர்வ விளக்கங்கள் எதுவும் அளிக்கப்படவில்லை.
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam