அஸ்வெசும இரண்டாம் கட்டப் பயனாளர்களுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்!
அஸ்வெசும" நலன்புரித்திட்டத்தின் இரண்டாம் கட்ட பயனாளர்களுக்கான இந்த மாத மாதக் கொடுப்பனவு தொடர்பில் நலன்புரி நன்மைகள் சபை அறிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜூன் மாத கொடுப்பனவுகள் நாளை (23) முதல் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுமென நலன்புரி நன்மைகள் சபை அறிவித்துள்ளது.
நலன்புரி நன்மைகள் சபை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, இந்த இரண்டாம் கட்டத்தின் கீழ் மொத்தம் 270,025 குடும்பங்கள் நிதிப் பலன்களைப் பெறத் தகுதி பெற்றுள்ளன.
அதிகமான தொகை
இதற்கமைய, தகுதிபெற்ற பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் ரூ. 3.28 பில்லியனுக்கும் அதிகமான தொகை நாளை முதல் நேரடியாக வரவு வைக்கப்படவுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அஸ்வெசும' நலன்புரி கொடுப்பனவுத் திட்டத்தின் முதற்கட்டத்தின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜூன் மாதத்திற்குரிய கொடுப்பனவு கடந்த (18) ஆம் திகதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
திரையுலகில் புதிய டிரெண்ட்... புதிய எலக்ட்ரிக் கார் வாங்கிய பிரபுதேவா! விலை எவ்வளவு தெரியுமா? Manithan