பரபரப்பை ஏற்படுத்திய இளம்பெண்ணின் மர்ம மரணம்.. நீதிமன்ற தீர்ப்பால் புதிய திருப்பம்
கண்டி, குண்டசாலை - வராபிட்டிய பகுதியில் வீடொன்றிலிருந்து மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்ட இளம் பெண்ணின் மரணம் குறித்த நீதிமன்ற விசாரணை, நேற்று (21) பிற்பகல் கண்டி தேசிய மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
இதன்போது மரணத்திற்கான குறிப்பிட்ட காரணத்தைக் கூறாமல், ஒரு திறந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மேலும், மரணத்திற்கான காரணத்தை அறிவியல் பூர்வமாக உறுதி செய்வதற்காக, உடல் பாகங்களை அரசாங்க ஆய்வாளரிடம் அனுப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸ் விசாரணையில் சந்தேகம்..
பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, உயிரிழந்த சிறுமியின் உடல் இறுதி மரியாதைக்காக திகண, அலுத்வத்தாவில் உள்ள உறவினர் வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையில், இந்தச் சம்பவம் பொலிஸ் விசாரணைகளின் தன்மையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று அவரது உறவினர் ஒருவர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
”இந்தச் சம்பவம் தொடர்பாக இலங்கை பொலிஸார் நடத்திய விசாரணை மிகவும் ஒருதலைப்பட்சமானது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த எங்கள் பிள்ளைக்குப் பெரும் அநீதி இழைக்கப்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என நாங்கள் சந்தேகிக்கிறோம்” என கூறியதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு
you may like this