உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.. சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு - சஜித் தரப்பு கிளப்பும் புதிய சர்ச்சை

CID - Sri Lanka Police Sajith Premadasa Easter Attack Sri Lanka Crime
By Rakesh Jun 22, 2026 02:04 PM GMT
Report

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற சங்கிரில்லா ஹோட்டலில், தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் ஹாஷிம் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில் அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்களின் விவரங்கள் மாத்திரம் மறைக்கப்பட்டுள்ளன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரம் குறித்து தற்போதைய அரசு தீவிரமாகத் தேடிப் பார்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு அவர் மேலும், "உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் இடம்பெற்ற தினத்துக்கு முன்தினமான 2019 ஏப்ரல் 20ஆம் திகதி இரவில், சஹ்ரானும் அவருடன் இருந்த மற்றொரு நபரும் கொழும்பு சங்கிரில்லா ஹோட்டலின் 116ஆம் இலக்க அறைக்கு வந்து தங்கியுள்ளனர். மறுநாள் ஏப்ரல் 21ஆம் திகதி காலையிலேயே அவர்கள் இந்தக் கொடூர தாக்குதலை நடத்தியிருந்தார்கள்.

இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதைத் தொடர்ந்து, பாதுகாப்புத் தரப்பினரால் சங்கிரில்லா ஹோட்டல் அறைகளில் அதற்கு முந்தைய இரண்டு வார காலப்பகுதியில் தங்கியிருந்த அனைத்துப் பயணிகளினதும் விவரங்கள் மற்றும் தகவல்கள் பெற்றுக்கொள்ளப்பட்டன.

உயிர்த்த ஞாயிறு விசாரனையால் பதறும் ராஜபக்சர்கள் - சுரேஷ் சலே தொடர்பில் ஹந்துன்நெத்தி விமர்சனம்

உயிர்த்த ஞாயிறு விசாரனையால் பதறும் ராஜபக்சர்கள் - சுரேஷ் சலே தொடர்பில் ஹந்துன்நெத்தி விமர்சனம்

முன்னர் தங்கியிருந்தவர்களின் குறிப்பு 

இருப்பினும், சஹ்ரான் தங்கியிருந்த 116ஆம் இலக்க அறையில், அவருக்கு முன்னர் தங்கியிருந்தவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் மாத்திரம் எங்கும் பதியப்படவில்லை.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்.. சஹ்ரான் தங்கியிருந்த அறை விவரம் மறைப்பு - சஜித் தரப்பு கிளப்பும் புதிய சர்ச்சை | Easter Attack Sahran Hotel Room Sajith New Inquiry

எந்தவொரு விவரப் பதிவுகளும் இல்லாமல் ஒரு சர்வதேச ஹோட்டலில் யாருக்கு அவ்வாறு அறைகள் வழங்கப்பட முடியும்? மிகவும் செல்வாக்குமிக்க முக்கிய பிரமுகர்களுக்கு மாத்திரமே அவ்வாறான சலுகைகள் வழங்கப்பட முடியும்.

அப்படியானால், சஹ்ரான் வருவதற்கு முன்னர் அந்த அறையில் தங்கியிருந்த அந்த முக்கிய பிரமுகர்கள் யார்? இந்த விவரங்கள் அனைத்தும் ஏற்கனவே நீதிமன்ற வழக்கு விசாரணைகளின் போது வெளிவந்த உண்மைகளாகும்.

அத்துடன், சஹ்ரான் இருந்த அறையின் கதவைத் திறப்பதற்கு டிஜிட்டல் இலத்திரனியல் அட்டை ஒன்று விநியோகிக்கப்பட்டுள்ளதும், அதனைப் பயன்படுத்தி கதவு திறக்கப்பட்டுள்ளதும் தரவுகளில் பதிவாகி இருக்கின்றன.

ஆனால், அந்த அறையில் அதற்கு முன் தங்கியிருந்த நபர் யார் என்பது விடுபட்டுள்ளது. உலகில் ஹோட்டல் பதிவுகள் ஏதுமின்றி தங்கும் சலுகை மிக முக்கியமான சில உயர்மட்டப் பிரமுகர்களுக்கு மட்டுமே காணப்படுகின்றது.

எனவே, அங்கு தங்கியிருந்தவர்கள் யார் என்பதை இந்த அரசு உடனடியாகத் தேடிப் பார்க்க வேண்டும். இவ்வாறான பல மறைக்கப்பட்ட உண்மைகள் தற்போதைய புதிய விசாரணைகளின் மூலம் வெளிவரும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம்." 1 என்றார்.

காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

காலக்கெடு எதுவும் விடுக்கப்படவில்லை.. இலங்கை கிரிக்கெட் தொடர்பில் வெளியான தகவல் குறித்து அரசாங்கத்தின் அறிவிப்பு

குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்

குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படும் எரிபொருளுக்கு மானியம் வழங்க நடவடிக்கை - வெளியாகியுள்ள புதிய தகவல்

மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US