கெஹலிய ரம்புக்வெல்ல அரசியலில் இருந்து தற்காலிக ஓய்வு
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல , அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்துக் கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கண்டி, ஓக்ரே ஹோட்டலில் தனது ஆதரவாளர்களை வரவழைத்து நடத்திய விருந்துபசாரத்தின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்காலிக ஓய்வு
இந்தச் சந்திப்பில் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபையின் முன்னாள் பிரதிநிதிகள் உள்ளிட்ட சுமார் ஐநூறு பேர் வரையானோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது கெஹலிய ரம்புக்வெல்ல சார்பில், அவருக்கு மிக நெருக்கமான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜி. சிரிசேன , அரசியலில் இருந்து கெஹலிய தற்காலிக ஓய்வெடுத்துக் கொள்ளும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்த கெஹலிய , ஆதரவாளர்கள் மத்தியில் நன்றியுரை நிகழ்த்தியதுடன், மீண்டும் தனது வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ளார்.

மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri