சஜித்திடம் இருந்து பதவி விலகிய ஹிருணிகா
ஐக்கிய மக்கள் சக்தியின் பெண்கள் அமைப்பான சமகி வனிதா பலவேகயவின் தேசிய அமைப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பதவியில் இருந்து விலகிய போதிலும், கட்சியின் செயற்பாட்டு உறுப்பினராகத் தொடர்ந்தும் இருந்து வருவதாகவும், 2024ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு
மேலும், ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தின் போது அமைப்பாளர்கள் தமது கடமைகளை நிறைவேற்றவில்லை என கட்சியில் இருந்து சுமத்தப்பட்ட குற்றச்சாட்டினால் ஏற்பட்ட விரக்தியே தனது பதவி விலகலுக்கு காரணம் என ஹிருணிகா தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தனது பதவியில் இருந்து விலகுவதற்கான இந்த முடிவில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வரவிருக்கும் தேர்தலில் பொது மக்கள் தன்னை மீண்டும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்வார்கள் என தனது நம்பிக்கையை தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri
உக்ரேனிய, ஐரோப்பிய பங்களிப்பு இல்லாமல் போர் ஒப்பந்தம் செல்லாது: ஐரோப்பிய ஒன்றியம் போர்க்கொடி News Lankasri