விரைவில் திறந்த நீதிமன்றத்தில் முன்னிலையாகும் கெஹல்பத்தர பத்மே.. சிஐடி முன்வைத்துள்ள கோரிக்கை
பாதாள உலகக் குழுத் தலைவரான கெஹெல்பத்தற பத்மேவை திறந்த நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவது குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கு இன்றையதினம் (12) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சிஐடியின் கோரிக்கை..
கெஹெல்பத்தற பத்மே உட்பட இரு சந்தேகநபர்களும் சூம் (Zoom) தொழில்நுட்பம் ஊடாக இன்று நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கம்பஹா பபா மற்றும் பபி ஆகிய இரு பாதாள உலகக் குழுத் தலைவர்களை படகு மூலம் சட்டவிரோதமாக இந்தியாவிற்கு கடத்தியமை தொடர்பாக கெஹெல்பத்தற பத்மேவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கை விசாரித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த கோரிக்கையைக் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை அறிக்கையை ஆய்வு செய்த பின்னர் தேவையான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்த நீதவான், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேகநபர்களையும் வரும் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.