கொக்குவில் பிரம்படி தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39வது ஆண்டு நினைவேந்தல்
கொக்குவில் பிரம்படி பகுதியில் இந்திய அமைதிப் படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் 39வது ஆண்டு நினைவேந்தல் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது.
குறித்த நினைவேந்தல் நிகழ்வு நேற்றைய தினம் (11.10.2026) கொக்குவில் பிரம்படிச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபிக்கு அருகில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
மலரஞ்சலி
படுகொலை செய்யப்பட்டவர்களின் நினைவாக நினைவுத் தூபியின் முன் சுடரேற்றப்பட்டு, மலரஞ்சலி செலுத்தி அகவணக்கம் செலுத்தப்பட்டது. இந்த நிகழ்வில் பெருந்திரளானோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த 1987ஆம் ஆண்டு அக்டோபர் 11 மற்றும் 12ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் நோக்கி இந்திய இராணுவத்தினர் மேற்கொண்ட "ஒப்பரேசன் பவன்" இராணுவ நடவடிக்கையின் போது இந்த கொடூர படுகொலை அரங்கேறியது.
பிரம்படி வீதி, புதுக்காடு சந்தி மற்றும் பொற்பதி வீதி ஆகிய பகுதிகளில் இந்திய இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூடு மற்றும் கனரக வாகனங்களால் நசுக்கிய தாக்குதல்களில் பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டதாக தெரியவருகின்றமை குறிப்பிடத்தக்கது.


