சஞ்சீவ கொலைக்கு பழிவாங்கல்! புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை

CID - Sri Lanka Police Sri Lanka Police Gampaha Death
By Dharu Feb 26, 2025 01:59 AM GMT
Report

கணேமுல்ல சஞ்சீவ கொலையைத் திட்டமிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் குடும்ப உறுப்பினர்களைக் கொல்ல நடத்தப்பட்ட முயற்சி, பொலிஸ்  புலனாய்வுப் பிரிவின் வெற்றிகரமான தலையீட்டால் நேற்று முறியடிக்கப்பட்டிருந்தது.

புலனாய்வு அதிகாரிகளின் உடனடி தலையீட்டின் காரணமாக கொலைத் திட்டத்தை செயல்படுத்த வந்த இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் செய்தித் தொடர்பாளர் விளக்கமளித்திருந்தார்.

கெஹல்பத்தர பத்மேவும் அவரது மனைவியும் தற்போது வெளிநாட்டில் உள்ளனர் என்றும், மனைவியின் குடும்ப உறுப்பினர்கள் பன்னால பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசித்து வருகின்றனர் பொலிஸார் கூறியிருந்தனர்.

பெப்ரவரி 24 ஆம் திகதி மாலை, அவரது வீட்டை காணொளி எடுத்துக்கொண்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள் குறித்து இரகசிய தகவல் கிடைத்ததாக பொலிஸ் தரப்பு கூறியிருந்தது.

பொலிஸாரை ஏமாற்றும் செவ்வந்தியை பிடிக்க ஒரு மில்லியன் ரூபா பணம்

பொலிஸாரை ஏமாற்றும் செவ்வந்தியை பிடிக்க ஒரு மில்லியன் ரூபா பணம்

இரு சந்தேக நபர்கள்

இந்தத் தகவலைப் பெற்ற பிறகு, உடனடியாகச் செயல்பட்ட பாதுகாப்பு பிரிவு, இரு சந்தேக நபர்களையும் கைது செய்திருந்தனர்.

குறித்த முயற்சி நடந்தபோது கெஹல்பத்தர பத்மேவின் மனைவியின் தாய், தந்தை மற்றும் தம்பி ஆகியோர் வீட்டில் தங்கியிருந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சஞ்சீவ கொலைக்கு பழிவாங்கல்! புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை | Kehelbaddara Padme Attempt To Kill Wife

விசாரணையின் போது, ​​கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களும் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரின் கூற்றுப்படி, வெளிநாட்டில் வசிக்கும் 'துபாய் சமீரா' என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இந்த துப்பாக்கி சந்தேக நபர்களுக்கு வழங்கப்பட்டதாக தகவல் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.

மேலும் வரும் நாட்களில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பழிவாங்கப்படும் ராஜபக்சர்கள்! பாதாள குழுக்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

பழிவாங்கப்படும் ராஜபக்சர்கள்! பாதாள குழுக்கள் தொடர்பில் சுமத்தப்படும் குற்றச்சாட்டு

கைது செய்வதற்கான சாத்தியக்கூறு

சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாகவும், எதிர்வரும் நாட்களில் கொலைச் சதித்திட்டத்தில் தொடர்புடைய மேலும் பலரை கைது செய்வதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

சஞ்சீவ கொலைக்கு பழிவாங்கல்! புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை | Kehelbaddara Padme Attempt To Kill Wife

துபாயில் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்குக் காரணம் என்று குற்றம் சாட்டப்படும் கெஹல்பத்தர பத்மசிறி(பத்மே) என்கிற 'பத்மே', 2022 ஆம் ஆண்டு தனது தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு, 2025 ஆம் ஆண்டு கணேமுல்ல சஞ்சீவவை கொன்று, தனது தந்தையின் மரணத்திற்குப் பழிவாங்கியதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

மினுவாங்கொட பாதாள உலக தரப்பில் சமீபத்திய பெயராக உருவெடுத்த 'பத்மே' தொடர்பில் விசாரிக்கும் போது, ​​இது ஒரு சாதாரண இளைஞனின் வாழ்க்கை குற்ற உலகிற்கு இழுக்கப்படும் கதை என அறிய முடிந்ததாக தென்னிலங்கை நாளிதல் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

குறித்த நாளிதல் செய்தியில் பின்வருமாறு கூறப்பட்டிருந்தது.

கெஹல்பத்தர பத்மசிறியின் தந்தை நெவில் பெரேரா, 1970களின் பிற்பகுதியில் பாதாள உலகத்திலிருந்து திரும்பிய ஒரு தொழிலதிபராவார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான சமீபத்திய தகவல்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான சமீபத்திய தகவல்!

கெஹல்பத்தர பத்மே

நெவில் பெரேரா, 1978-79ல் கொலைக் குற்றத்திற்காக சிறையில் இருந்துள்ளார்.

சஞ்சீவ கொலைக்கு பழிவாங்கல்! புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை | Kehelbaddara Padme Attempt To Kill Wife

பின்னர் அவர் அனைத்து குற்றச் செயல்களையும் கைவிட்டு வணிகத் துறையில் நுழைந்துள்ளார்.

இந்நிலையில் அவரது மகனான பத்மே 24 வயதில் திருமணமாகி கெஹல்பத்தரையில் ஒரு வீட்டில் குடியேறியுள்ளார்.

பத்மசிறியின் வாழ்க்கையானது அவரது தந்தை ஒரு பாதாள உலகக் கும்பலால் கொலை செய்யப்பட்டபோது பாதாள உலகத்திதை நோக்கி திரும்பியுள்ளது..

இந்த சம்பவத்திற்குப் பிறகு, தனது தந்தையின் கொலையில் ஈடுபட்டவர்களை பழிவாங்க 'கெஹல்பத்தர பத்மே' என்ற பெயரில் பாதாள உலகத்திற்குள் பத்மசிறி நுழைந்துள்ளார்.

இதில் பாஸ்போடா என்பவரும், சஞ்சீவ என்பவரும் தந்தையைக் கொலை செய்ய திட்டமிட்டமையை கெஹல்பத்தர பத்மே கண்டறிந்துள்ளார்.

பாஸ்போடாவிற்கும் கெஹல்பத்தர பத்மேவிற்கும் இடையிலான மோதலின் மூலத்தில் பாஸ்போடாவிற்கு சொந்தமான 22 பேர்ச் நிலம் சம்பந்தப்பட்ட ஒரு ஒப்பந்தம் இருந்துள்ளது.

இது தகராறாக மாறி, பத்மேவின் உறவினர் சமிந்த என்கிற 'சாமி'யின் கொலையில் முடிந்துள்ளது.

சாமியின் மரணத்தால் கோபமடைந்த பாஸ்போட்டா, கெஹல்பத்தர பத்மேவை கொல்லத் திட்டமிட்டுள்ளார். அவரே மரணத்திற்கு தான் காரணம் என்று நினைத்துள்ளார்.

ஆனால் அந்த முயற்சி தோல்வியடைந்து. இதன்போதே பத்மேவின் தந்தை நெவில் பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான சமீபத்திய தகவல்!

கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான சமீபத்திய தகவல்!

உயிருக்கு அச்சுறுத்தல்

இந்த சம்பவத்திற்குப் பிறகு, பத்மே தனது உயிருக்கு அச்சுறுத்தல் காரணமாக துபாய்க்கு தப்பிச் சென்றுள்ளார்.

துபாயில் இருந்து, பத்மே தனது தந்தையின் கொலையில் தொடர்புடைய அனைவரையும் பழிவாங்கத் திட்டமிட்டுள்ளார்.

சஞ்சீவ கொலைக்கு பழிவாங்கல்! புலனாய்வு பிரிவின் அதிரடி நடவடிக்கை | Kehelbaddara Padme Attempt To Kill Wife

அதற்காக, துபாயில் தங்கியிருந்த ஹீனத்யானா, மகேஷ் மற்றும் வருணாவின் உதவியைப் பெற்றதாக பொலிஸாரின் முன்னைய விசாராணைகளில் தெரியவந்திருந்தது.

இதில் முதன் முதலாக பாஸ் போடாஜூலை 27, 2022 அன்று கொலைசெய்யப்பட்டார்.

அன்றைய தினத்தில், கம்பஹா நீதிமன்றத்தில் ஒரு விசாரணையில் கலந்து கொண்டு வெளியே வந்த பாஸ்போடா, தனது வாகனத்தில் ஏறி ஒரு நண்பருடன் கதைத்த அடித்துக் கொண்டிருந்தபோது, ​​வெள்ளை நிற காரில் இருந்து இறங்கிய ஒருவர் திடீரென T56 துப்பாக்கியால் சுடப்பட்டதாக செய்திகளில் கூறப்பட்டுள்ளது.

தாக்குதலில் பலத்த காயமடைந்த பாஸ் போடா, கம்பஹா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மரணமடைந்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில் தெரியவந்ததன் படி, இந்தக் கொலை துபாயைச் சேர்ந்த கெஹல்பத்தர பத்மேவால் திட்டமிடப்பட்ட பழிவாங்கும் செயல் என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில் கணேமுல்ல சஞ்சீவவும் இந்தியாவில் இருந்ததாக கூறப்படுகிறது.

கம்பஹா ஒஸ்மான் என்ற தொழிலதிபர் சம்பந்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்தின் சிசிரிவி காட்சிகளை ஆய்வு செய்ய அவரது தந்தை பொலிஸாருக்கு உதவியதே பத்மேவின் தந்தை கொலைக்கான முதன்மைக் காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

“கணேமுல்ல சஞ்சீவ மற்றும் அவரது கும்பல் அப்பாவி மக்களைக் கொன்று போதைப்பொருள் கடத்தலில் பணம் சம்பாதிப்பதாக அவர் விமர்சிக்கிறார்.

தனது தந்தையின் கொலைக்குப் பிறகு தான் பாதாள உலகத்திற்குள் நுழைந்ததாகக் கூறும் பத்மசிறி, இப்போது எந்த குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை என்று வலியுறுத்துகிறார்.

பொலிஸாரை ஏமாற்றும் செவ்வந்தியை பிடிக்க ஒரு மில்லியன் ரூபா பணம்

பொலிஸாரை ஏமாற்றும் செவ்வந்தியை பிடிக்க ஒரு மில்லியன் ரூபா பணம்

பொலிஸில் சரணடையத் தயார்

தன் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் பொலிஸில் சரணடையத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.

சமீபத்தில் ஒரு வானொலி நிகழ்ச்சியில் அவர் இதைச் கூறியிருந்தார்..

சஞ்சீவ கொலையில் பத்மே ஈடுபட்டிருக்கலாம் என்றும், இந்தத் திட்டத்தில் கமாண்டோ சாலிந்த, படுவத்தே சாமாரா, ஜா-அல ஜூட் மற்றும் கெசல்வத்தே தினுக ஆகியோரும் ஈடுபட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்நிலையில் அவர்களைக் கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், கொழும்பு, Birmingham, United Kingdom

26 Oct, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada

19 Oct, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் களபூமி, London, United Kingdom, கொழும்பு

26 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Den Helder, Netherlands

21 Oct, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, வெள்ளவத்தை, Pinner, United Kingdom

24 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், Montreal, Canada

25 Oct, 2020
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, Pickering, Canada

20 Oct, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பூந்தோட்டம், மகாறம்பைக்குளம்

31 Oct, 2019
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Gossau, Switzerland

25 Oct, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Toronto, Canada

04 Nov, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கரவெட்டி கிழக்கு, Jaffna, Barkingside, United Kingdom

25 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம்

14 Nov, 2015
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, சென்னை, India

19 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் கருங்காலி, அராலி வடக்கு

28 Oct, 2011
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, London, United Kingdom

06 Oct, 2025
மரண அறிவித்தல்

பளை, இராமநாதபுரம்

22 Oct, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவிஸ், Switzerland

23 Oct, 2016
மரண அறிவித்தல்

அரியாலை, Stuttgart, Germany, Mont-de-Marsan, France

15 Oct, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Villeneuve-Saint-Georges, France

21 Oct, 2025
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

19 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US