கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பான சமீபத்திய தகவல்!
குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவ மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தரப்பினர், ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட விதம் குறித்த தகவல்கள் தற்போது தெரியவந்துள்ளது என இலங்கை பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
பொலிஸ் ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க இதனை வெளிப்படுத்தியிருந்தார்.
கணேமுல்ல சஞ்சீவவை சுட்டுக் கொன்ற பிறகு தப்பி ஓடிய வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான இஷாரா செவ்வந்தி, தனது தம்பியுடன் குறுஞ்செய்தி மூலம் தொடர்பு கொண்டு வந்ததாகவும் பொலிஸார் அறிந்துள்ளனர்.
இந்த சர்ச்சைக்குரிய கொலைக்குப் பின்னணியில் மூளையாகச் செயல்பட்டவர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் அல்ல, மாறாக வழக்கறிஞர் வேடமணிந்த சந்தேக நபரான பெண்தான் என்ற தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் குறித்த பெண்ணின் தாயும் சகோதரனும் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் சஞ்சீவ தர்மரத்னவின் அறிவுறுத்தலின் பேரில் கொழும்பு குற்றப்பிரிவு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் கணேமுல்ல சஞ்சீவவை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் பல சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைதுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு புதிய திருப்பங்களை கொண்டுள்ளது.
இதன்படி இந்த தாக்குதலின் பின்னணி தொடர்பில் விரிவாக ஆராய்கிறது கீழுள்ள காணொளி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

152 ஆண்டுகளுக்கு பின் மகா சிவராத்திரியில் நடக்கும் கிரக பெயர்ச்சி- செல்லப்பிள்ளைகளாக இருக்கும் நட்சத்திரங்கள் Manithan

கனடாவின் புதியா விசா விதிகள்... இந்தியர்கள் உட்பட கடும் சிக்கலில் வெளிநாட்டு மாணவர்கள் News Lankasri
