கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைச்சர் மற்றும் அவரின் மகள் மீது திடீர் சோதனை
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ராஜங்க அமைச்சர் மற்றும் அவரின் மகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
சட்டவிரோதமான பொருட்களை கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனினும் அதனை நிரூபிக்கும் வகையில் எந்த ஆதாரமும் அவர்களது பயண பொதிகளில் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
சுங்கத்துறை அதிகாரி
அமெரிக்காவில் இருந்து தனது மகளுடன் இலங்கை வந்த அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் ஒருவரே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார்.

திறைசேரி அதிகாரி ஒருவரினால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில், பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
உரிய தகவல் இல்லாமல் சோதனை செய்வதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு எதிராகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மீனா மறைக்கும் விஷயம் என்ன, ஓபனாக கூறிய முத்து, கடும் ஷாக்கில் ரோஹினி.. சிறகடிக்க ஆசை எபிசோட் Cineulagam
பிரித்தானியாவில் பிறந்த பிள்ளைகளும் நாடுகடத்தப்படலாம்: அடிமடியில் கை வைக்கும் உள்துறைச் செயலரின் திட்டம் News Lankasri