யாழில் பணத்தை காலால் மிதித்த வர்த்தகர்: பொலிஸ் தலைமையகத்தில் வழங்கிய உத்தரவு
யாழில் வர்த்தகர் ஒருவர் பணத்தை காலால் மிதிக்கும் காணொளி பதிவுகள் அண்மையில் சமூக ஊடகங்களில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், அது தொடர்பிலாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் தலைமையகத்தில் இருந்து வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைய, யாழ்ப்பாண பொலிஸ் பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரான ஜெகத் விஷாந்த தலைமையிலான குழுவினரால் மேற்படி வர்த்தகர் யாழ்ப்பாணம் காவல்நிலையத்துக்கு நேற்று(22) அழைக்கப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
அவரின் வாக்குமூலம் அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.
பெரும் அதிர்ச்சி
யாழ்ப்பாணத்தை (Jaffna) சேர்ந்த நபர் ஒருவர் தன்னை கோடீஸ்வரராக மக்கள் மத்தியில் வெளிப்படுத்திய நிலையில், தன்னை தியாகி என அவரே அழைத்து வருகின்றார்.

இவர், பெருந்தொகை பணத்தை தனது காலில் போட்டு மிதித்துள்ளமை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
சிறிலங்கா மத்திய வங்கியின் சட்டங்களுக்கு அமைய நாணயத்தை சேதப்படுத்துவது பாரிய குற்றமாகும். எனவே, இது தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
அணையா விடுதலைத்தீ சங்கரின் சாவு எப்படி வீரசரித்திரமானது.. 13 மணி நேரம் முன்
அவுஸ்திரேலியா அணிக்காக சதமடித்த முதல் இந்தியர்! 184 பந்துகளில் 163 ஓட்டங்கள்..சிட்னியில் ருத்ர தாண்டவம் News Lankasri
சரிகமப சீசன் 5 போட்டியாளர் சின்னு செந்தமிழனுக்கு இப்படியொரு வாய்ப்பா?... வேறலெவல் சர்ப்ரைஸ் Cineulagam
வெட்ட வந்த அறிவுக்கரசி, கடும் ஷாக்கில் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam